வியாழன், 31 ஜூலை, 2014


வசந்தமாளிகை        வசந்தமண்டபம் 
(யாழ்  வழக்கில்  எழுத்து )

தெய்வானைப்பிள்ளை  ஆச்சி  யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில  சுகமில்லாமல்  கிடந்த நேரம்
பன்ரெண்டைகால்  பஸ்ஸை  பிடிச்சு  மைதிலி தன்ர   அம்மாவோட  யாழ்ப்பாணம்  போய்  ஆச்சிய வருத்தம் பாத்துவிட்டு, வெலிங்டனில சக்கை  போடு  போட்ட வசந்தமாளிகையை  போய்ப்பாத்தா
  250 நாளுக்கு மேல ஓடின  படம்  எப்பவும்  ஹவுஸ்புல்லா  ஓடின  படமெண்டுஅவளின்ர   மாமா
  சொல்லி சொல்லி பெருமைப்படுவார்  - மைதிலி நல்ல வடிவானவளாக  இருந்ததால கிடுகு வேலியும்
உயந்தது  பெடியளின்ர  சைக்கில்  சீற்றுகளும்  உயந்தது

அவளின்ர அம்மையாவோட  வேலைக்கு  போன  பெடியள் வசந்தமாளிகையை  வசந்தமண்டபம் பக்திப்படமெண்டு பொய் சொல்லி ஒருமாரி மனிசனை  ஒரு  சனிக்கிழமை கிளம்பப் பண்ணிப்போட்டாங்கள்,  மனுசனும்  நம்பி,  ஊர்வலம்  போற தேர்போல  சோடிச்சுக்கொண்டு 
மடிப்பு குலையாத  வேட்டி  சால்வை  சேட்டோட  வெளிக்கிட்டு  போய்  படத்தை  பாத்திருக்குது
என்ன  இன்னும்  முருகன்  பிள்ளையாரை  காணேல்லை  எண்டு  கையை  கும்பிடத்  தயாரா வைச்சுக்கொண்டு  இருக்க " ஏன்  ஏன்  ஒரு  கிண்ணத்தை ஏந்துகிறேன் " பாட்டு வர
அந்தப்பாட்டுக்கு ஆடினவளவை துடையை காட்டி  ஆட மனுஷன்  கொதியாகி வெளியில  வந்துட்டுது

 அப்ப மட்டும்  பக்திப்படம் எண்டு  சொன்னவங்கள்  மாட்டுப்பட்டிருந்தா  மனிசன்  அடிச்சே  கொண்டிருக்கும் .

 குறுக்கால  போவார்  பிரளுவாங்கள்  எண்டு  யாழ்ப்பாணத் திட்டல்  அத்தனையும்  மனுசன்ர  வாயால  வந்து போனது   தென்னம்பிள்ளைக்கு கீழ  படுத்துக்கிடந்த  நாய் தன்னைத்தான்  திட்டுறாராக்கும் எண்டு நினைச்சு  குலைக்க  மனிசனிருந்த  விசரில, பக்கத்தில கிடந்த   கிண்ணத்தால  ஒரே  ஏறி
 நாய் ஓடித்தப்பிட்டுது.

ரெண்டுநாள்  கழிச்சு  கடையடியில  பெடிப்பிள்ளையள் மனுசனிட்ட  வசமா  மாட்டுப்பட ,  ஏன்ரா   அவள் கொண்டுவந்து  துடைய முகத்துக்கு முன்னால  காட்டுறாள் குலுக்கிறாள்,  உதுதானே உங்களுக்கு  பக்திப்படம்   எண்டு  திட்டத் தொடங்கி கவுண்டமணியாச்சு மனிசன்,  பெடியள்  எடுத்த  ஓட்டம்  ஒலிம்பிக்கையும் வெல்லும் ,  நல்ல காலம்  மனுஷன்  இண்டையான்  படங்கள  பாக்காமல் போய் சேந்துட்டுது .

ம.இரமேசு
தொன்மார்க்






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக