சில நேரங்களில் சில அறிவாளிகள்
சிரித்தது வானம் உரிமைகொண்டு அன்புகாட்டியது
சூரியன் சினந்தது மனதோடு கோபம் கொண்டது
அது அகிலத்துக்கு வெளிச்சம் தரும் என்றால்
அது அறிவை இருட்டாக்கியல்லவா வைத்தது
பிந்திய நிலவில் சில அநியாய பிம்பங்கள்
அவை அறிவாளிப்பிம்பங்கள் ஆம் அவைகளும்
அற்ப விடயங்களுக்கு வானத்துடன் நன்றியின்றி
முறைக்கும் நட்பை கெடுக்கும் - பறவைகள்
அதன் கீழே பட்டமாய் பறக்கும் இனிய சிலைகள்
விலைகள் இன்றி விண்தொடும் நினைவுகள்
ஆணவ அறிவாளிகளுக்கும் ஆற்றல் உண்டு
ஆனாலும் அவர்கள் வானத்தின் கீழே இருக்கின்றார்கள்
நல்லவர் சினம் நிலையாது என்றது வானம்
சில நேரங்களில் சில அறிவாளிகள் இல்லை
அவர்களை என்ன பெயர் கொண்டு அழைப்பது
என்றது பறவை ஆத்திரம் அறிவாளியின் விழிகளையும்
மறைக்கும் என்றது முகில்கள் பயிர்கள் ஆமோதித்தன
ஆக்கம்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக