காய்ந்த பூக்கள் (2)
எடி பிள்ளை தில்லை----- என்று கிணத்தடியில நிண்டுகொண்டு ஓங்கிக் கத்தினா சாந்தம்மா, என்ன-- என்றபடி தில்லை வந்தாள் கொப்பருக்கு
காரமா ஏதாவது செய்து போடவேணும் மனுஷன் ரெண்டுநாளா சாப்பாடு சரியில்லை காரமுமில்லை எண்டு புறு புறுத்தது அட்டாளையில கிடக்கிற குண்டானை எடுத்து வடிவா கழுவு மனுஷனுக்கு கூழ் வைக்க வேணும் மனுஷன் கூழெண்டா விரும்பி குடிக்கும் என்றா சாந்தம்மா - எடியே ! இஞ்ச கிட்டவா நானும் ரெண்டு நாளா யோசிக்கிறன் ஒண்டும் தட்டுபடேல்லை கமலக் குஞ்சி வீட்டை என்னவன் விசேசம் நடக்குமெண்டோ !!! அங்கை இனி சாந்தனுக்கு கலியாணம் தான் நடக்குமென்றாள் தில்லை, எட ...ஓமடி எப்படியடி உடன சொல்றாய் என்று வியந்து நிண்டா சாந்தம்மா நான் மூத்தவளின்ர பிள்ளையளை பற்றி யோசிச்சுக்கொண்டு சாந்தனை மறந்துவிட்டன் .
நானும் சிமித்தியக்காவும் பின்னேரம் யாழ்ப்பாணம் போகப்போறம் இதுக்கு மேல என்னால இண்டைக்கு வேற வேலை செய்ய முடியாது என்றுவிட்டு நகர்ந்தாள் தில்லை, போறது சரி படங்கிடம் பார்கிறதில்லை போனதும் வந்ததுமா இருக்கவேணும் பிறகு மனுஷன் கேள்விபட்டா என்ன நடக்குமெண்டு தெரியுந்தானே என்று மகளை கண்டித்தா சாந்தம்மா .

ஊரிலிருந்து வந்த கடிதத்தை படித்துவிட்டு யோசனையுடன் தேத்தண்ணி போட்டுக்கொண்டிருந்தான்எக்கவுண்டன் சாந்தன் ஏற்கனவே கொழும்பில் டீச்சராயிருக்கும் பவானி என்ற பெண்ணை காதலித்துவிட்டான் அவளும் யாழ்ப்பாணத்துக்காரிதான் பவானியின் நிபந்தனைகலியாணத்துக்கு பிறகு தங்கள் ஊரிலே இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன் என்பதே, கேட்டு வந்திருக்கும் ஒட்டற்ற பேத்தி மலரும் நல்ல அழகிதான் சங்கீத ஆசிரியை வேறு ஆனாலும் காதலித்தவளை ஏமாற்றக்கூடாது என்ற நினைப்பில் சாந்தன் இருந்தான்.
சாந்தனின் அழகிலும் பண்பிலும் மயங்கியவள் சாதியைபற்றி அறியாமலே காதலித்துவிட்டாள் பின்பு அறிந்ததும் பழையவர்கள் ஏற்றி வைத்த சாதித்தீ அவளுள்ளும் புகைந்தது யாழில் பிறந்தவர்களுக்கு காதல் கலியாணம் என்றால் முதலில் எழும் கேள்வியே என்ன சாதி என்ற மடத்தனமான கேள்வியே அதுக்கு அவளும் விதிவிலக்கல்ல
எல்லோரும் மனிதர்களே என்று எண்ணி வாழும் சமத்துவ மனம் யாழ் மக்களுக்கு இலகுவில் வராதவொன்று ஆபிரிக்காவோ ஐரோப்பாவோ யாரைவேணுமோ கலியாணங்கட்டு, ஆனா இஞ்சை கலியாணங் கட்டுறதெண்டா எங்கட சாதியுக்குள்ளதான் கட்டவேணும் என்ற எழுதாத சட்டம் அமுலில் இருக்கும் யாழ்ப்பாணம் இலகுவில் மாறமாட்டாது.
தன்னை கஸ்டப்பட்டு ஆளாக்கிய தாய் தந்தை மனதை நோகடிக்காமல் இருக்கவேண்டும் அவர்கள் பார்க்கும் இடத்தில்
திருமணம் செய்ய வேண்டும் என்றால் பவானியை களைய வேண்டும் இல்லை பவானியை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் பெற்றோருக்கு காட்டி
ஊரிலே திருமணத்தை நடத்தவேணும் அதற்கு பவானி ஒப்புக்கொள்ளவேண்டும் இல்லை அவளின் சாதியுக்குள்ள அவள் கிடந்து மசியட்டும்
என்ற முடிவை சாந்தன் சிந்தித்து எடுத்தான்,
பேசி வைத்தபடி இருவரும் பழைய படம் ஒன்று ஓடும் பிளாசா திரையரங்கில் சந்தித்துக்கொண்டனர் படம் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது சாந்தன் முழுவிபரத்தையும் சொல்லி முடிக்கவும் இடைவேளை விழவும் சரியாக இருந்தது கைக்குட்டையால் முகத்தை அரைவாசி மறைத்தபடி பவானி எழுந்து வெளியில் செல்ல சாந்தனும் தொடர்ந்தான் இஞ்சை பாரும் என்றவனை முறைத்து பார்த்துவிட்டு போனவள் போனவளே, இந்தப் பொம்பிளையளுக்கு என்ன சொன்னாலும் எப்பிடி சொன்னாலும் ஏறாது என்று அலுத்தபடி வீட்டுக்கு போக பஸ்பிடிக்க நடந்தான் சாந்தன் .

வடிப்பு
ம.இரமேசு
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக