ஐஸ்வர்யாராயும் அறிவை சிலமணிநேரங்கள் பெட்டியுக்குள் பூட்டிவைத்தார்.
February 21, 2012
இறைவனை மட்டும் நம்புங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சடங்குகளை அறிவுக்கு ஒத்துவராதவற்றை நம்பாதீர்கள். கண்மூடித்தனமாக மதத்தை நம்பும் ஆசிய ஆபிரிக்க நாடுகளிலேயே வறுமையும் சண்டைகளும் அதிகமாக இருக்கின்றது. அறிவியலின் பால் ஒழுகும் ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் தங்களுக்குள் இப்படி தேவையற்ற விடயங்களுக்கு சண்டை பிடிப்பதில்லை, தர்க்கம் புரிந்து மன நோவை வைத்து உறங்க செல்வதில்லை, முடிந்த மட்டில் இன்பமாக வாழுகின்றார்கள் அன்றாட கடமைகளை சரியாகச் செய்து .
நாங்கள் இறைவனிடம் அதிகம் எதிர்பார்க்கின்றோம், ஆக்கத்தில் அக்கறையை குறைத்து. சோம்பேறிகளாக, மதக்கூட்டங்கள் தர்க்கங்களால் வீணான சண்டைகளும் மன வடுக்களுமே மிகுதியாகின்றது. அது வருங்கால சமுதாயத்துக்கு அமைதிவாழ்வுக்கு நன்றல்ல, இறைவனும் சண்டை பிடிப்பவர்களை பிரியமாகப் பார்க்கமாட்டான். ஆதலினால் சகோதர சகோதரிகளே உண்மையான இறைவனை மட்டும் வணங்கி, நிம்மதியாக வாழ்வோம். அதிகம் வாயாடுதல் இறைநம்பிக்கைக்கு குந்தகம் உண்டாக்கும், எண்ணிப்பாருங்கள், அமைதி பேணுங்கள் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் நானே பெரியவன் என்று தலைக்கனத்தால் மற்றவர்களிடமிருந்து வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்போம்.
"முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன் சொலினதே அறம்"
(குறள் 93 ).
.
உலகம் அமைதியாக இருந்தால் உயிர்கள் நீண்டு வாழும் சகோதரத்துவம் பின்னிப்பிணைந்திருக்கும் இன்பம் நிறையும் ஏற்றங்கள் பெருகும் ஆதலினால் மற்றவர்களுடன் இனிய வார்த்தைகளால் பேசி அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி நாமும் மகிழ்வோம். உலகமக்கள் அனைவரும் ஓரினமே, ஆதலால் யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றார் உலக சகோதரத்தை வலியுறத்தி கணியன் பூங்குன்றனார் 2000 வருடங்களுக்கு முன்னரே, அவர் சொன்னதை மறந்தோம் நேற்று கென்னடி சொன்னார் என்றோம் இன்று ஒபாமா என்று சொல்லுகின்றோம் உலக மயமாக்குதல் வியாபாரத்தை பெருக்கும் நோக்கிலே சொல்லப்படுகின்றது இன்று என்றால் மிகையில்லை.சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல், தமிழர் வாழ்வும் வளமும் தமிழருக்குள் ஊடுருவி பிழைக்க வந்த மதவாதிகளினால் சிதைந்தது. தேவையற்ற பித்தலாட்ட சடங்குகளாலும் இடையில் முளைத்த சம்பிரதாயங்களாலும் மதவாதிகள் பிழைத்துகொண்டனர் சாமி பெயரை சொல்லி. அறிவு மழுங்கடிக்கப்பட்டது.
இந்துப்பெண்கள் கணவன் உயிர்துறந்தால் உடன்கட்டை ஏறுதல் என்றொரு கொடுமையான வழக்கத்தையும் மதவாதிகள் கொண்டிருந்தார்கள். அந்தக் கண்மூடித்தனமான வழக்கத்தை உடைத்தெறிந்து பெண்களை காத்த பெருமை ” ராஜா ராம் மோகன் ராயையே” சேரும் அவரை ஒவ்வொரு பெண்ணும் கையெடுத்து வணங்கவேண்டும். பெண்களென்ன மனித நேயம் மிக்க அனைவரும் வணங்கலாம் போற்றலாம் அந்த உத்தமரை. மதத்தின் பெயரால் உறுப்புகளை அறுத்தலும், எரிந்த உடலிலிருந்து எலும்பை எடுத்து அதனை வைத்து சடங்கு செய்வதும்; என்றெல்லாம் பிழைப்புவேண்டி அறிவுக்கு பொருந்தாத விடயங்கள் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வாழைமரத்துக்கு மாலைபோட்டு அல்லது தாலி கட்டி தோஷம் நீக்கும் சடங்கு என்றொரு சடங்கு, இதில் வேடிக்கை என்ன வென்றால் உலகப்பிரசித்திபெற்ற அழகி ஐஸ்வர்யா ராயே இப்படியான ஒரு சடுங்குக்குள் திணிக்கப்பட்டது. உலகப்போட்டியில் அறிவுபூர்வமாக பதிலிறுத்த பெண் கடைசியில் மதவாதிகளின் மக்கு வேலைக்கு மசிந்தாரே; மரியாதையின் காரணமாக இப்படி பிற்போக்குத்தனங்களை மதிப்போரால், அவர்கள் மீது பற்றுக்கொண்டவர்களும் அவர்களுக்காக அறிவுகெட்ட சடங்குகளில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி முழிக்க வேண்டியுள்ளதை நினைக்கையில் வேதனையுண்டாகின்றது.
கோயிலுக்குள் சென்று ஒருசில நிமிடங்கள் இறைவனை தரிசிக்கவே காசுகேட்கும் மடைத்தனத்தை , தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரசித்திபெற்ற கோயில்களில் காணலாம். இதை தவறு தப்பு என்று சொல்ல எந்தப் படித்தவர்களும் பண்பாளர்களும் உயரிய நோக்கங்கள் கொண்ட மனிதநேயர்களும் எழாதது குரல் கொடுக்காதது ஏனோ தெரியவில்லை. இறைவனுக்கு பயப்படும் ஒருவன் இறைவனை காட்டுகிறேன் காசுகட்டு பற்றுசீட்டு வாங்கு என்று சொல்வானா மக்களே ?
நீங்கள் இந்தியா செல்லும் பட்சத்தில் கோயில்களுக்கு சென்றால் தயவு செய்து கட்டணத்தைச் செலுத்தி உள்ளே சென்று சாமி கும்பிடாதீர்கள், அப்படி செய்வீர்களாயின் அது இறைவனுக்கு செய்த மிகப்பெரிய பாவமாகவே இருக்கும், என்பதனை மனதிற்கொள்வீர்களாக. அப்படியே சென்றால் காசுகட்டாது வெளியில் நின்று கண்களை மூடி உங்கள் தியானத்தை செய்துவிட்டு வாருங்கள். இப்படி அனைவரும் செய்யும் பட்சத்தில் காசுகறக்கும் ஏமாற்றுக்காரர்கள் கண் திறக்க வாய்ப்புண்டாகும், ஆக நாம் அனைவரும் அறிவின் கண்களைத் திறந்தால் அனைவருக்கும் ஆண்டவன் அன்பின் அருளின் கண்களைத் திறப்பார்.
எழுத்தாக்கம்
ம.இரமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக