அடியேன் இறை நம்பிக்கை உடையவன்
மத நம்பிக்கை இல்லாதவன், எல்லா
மதமும் எனக்கு ஒன்றே, இறைவன் முன்
எல்லோரும் அவரின் பிள்ளைகளே.
மனிதர்களே என் மார்க்கம் உன் மார்க்கம்
என்று பாதகமான செயலலை செய்து
பிரிந்தது நிற்கின்றார்கள். உண்மையான
இறை நம்பிக்கை உடையவர்கள் வன்முறைகளுக்கு
செல்ல மாட்டார்கள், இன்னொருவரை கொல்ல கனவிலும்
நினைக்க மாட்டார்கள், மதம் மதம் என்று வெறிபிடித்து
வாழும் மனிதர்களைக் கண்டு அவர்களுக்காக இறைவனிடம்
வேண்டுகின்றேன், அவர்கள் உன்னை மட்டும் நம்பட்டும் என்று.
வாழ்க நலம் - ஒன்றே தேவன் - எல்லோரும் உறவினரே
யாதும் ஊரே யாவருங் கேளிர் - வாழ்க நலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக