புதன், 13 ஆகஸ்ட், 2014

தமிழும்  சுவையும் 

நள்ளென்றென்றே, யாமம்; சொல்அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.

நெய்தல்  = கடலும் கடல் சார்ந்த நிலமும்

வீர மறவர்களும் வெண்பனி அலையின் நுரைகளும்
துள்ளிக்குதிக்கும்  தமிழ் நிலம்  நெய்தல் 

அங்கு ஒரு  காதலி  தன் தலைவன்  பிரிவால் வாடுகின்றாள்
நலமாகவே பொழுதும்  சொற்கள் வேகி முடிந்து அதாவது மக்களின்  நா  ஆட்டம் (அசைவு) ஓய்ந்து மக்கள் மகிழ்வாக   உறங்குகின்றார்கள், முடிவு இன்றி தொடர்கின்றது  உலகம் அதன் பொருள் உலகம்  உறங்குகின்றது  ஆனால்  நான் மட்டும் உறக்கமின்றி  வாடுகின்றேனே  என்று  தலைவி  வேதனை கொள்கின்றாள் தலைவனின்  பிரிவுத்துயர்  தாங்காது - 2000 ஆண்டுகளுக்கு முன் நெய்தல்  நிலத்தின் தமிழ்ப்புலவர்  பதுமனார்  வடித்த  தமிழோவியமிது  என்ன  ஒரு அழகான  சிந்தனை  வடிப்பு  இதைப் பருகிச்  சுவையாது    தமிழெரென வாழ்தல் நன்றோ  சொல்லீர் .

ம.இரமேசு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக