ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பிள்ளையினை பெற்றவள்  -  அவள்  அறியாளோ  மற்றவள் துயர்

இங்கே  சோறுங் கறியும் உண்பாரின்றி  சட்டியில்  வாடுது
அங்கே  சோறின்றி பிள்ளைகள்  தொட்டிலில்   வாடுது

பாலூட்டி  வளர்த்த  பாசத் தாயும் இங்கே பணங் கண்டு  இரங்கா பேயானாள்
பசி துடைக்க பொருள் கேட்டால் அலட்சியமாய் பார்க்காது  போகின்றாள்

பிள்ளையினை பெற்றவள் அவள்  அறியாளோ  இன்னொருத்தி துயர்
பேதையென்று ஊர் சொல்ல  பணப் போதையிலே சாய்கின்றாள்

உண்ணும்போதும்  உறங்கும்போதும்  எண்ணாரோ  இல்லாதாரை
எத்தனை  நம்பிக்கை வைத்து  இலங்கா சிறியில்  உதவி கேட்கின்றார்

நீயோ அதை  மேல் மேய்ந்த மாட்டினைப்போல் மேய்ந்துவிட்டு  அடுத்தபக்கம் தாவுகின்றாய்
பொறுப்பற்ற   கண்ணோடாக்  கயவரே நீர் பாரில் ஊர்ந்து  யாருக்கு  ஏது பயன்

வாடி விழுவோர்க்கு  கொடுத்து உதவாது கோடி கோடியாய் சீட்டு கட்டி சேர்த்து  என்ன காண்பாய்
நோய் வராது  உன் பணத்தால் தடுப்பு வேலி போட முடியுமா  இல்லை  நூறாண்டு  வாழமுடியுமா
நூறாண்டே  வாழ்ந்தாலும்  பேருண்டாமோ  பிறர்க்கு  இரங்கா  பேதைகளுக்கு;  எண்ணிப்பார்

சென்றல் காம்பில் நீ பழைய  உடுப்பினை  அடிபட்டு  பொறுக்கியதை நினைப்பதுண்டா
உயிர்காக்க உதவுங்கள் என நேசமாய் கேட்டால்   நீ போய்  கல்லை உடை புல்லை வெட்டு பணம் தேடு என்கின்றாய்,  இம் மட்டில்  உன்  அறிவு - சிரமதானம்  செய்து  பணம் கொள்ள  நான்  இருபது, ஐம்பது அங்கத்தவர்களுடன்  சங்கமா, கழகமா  ஊரில் உள்ளது போல்   நடத்துகின்றேன்.

பத்து  பதினையாயிரம்  சம்பளம் பெறும் உன்னால் இரண்டு பிட்சா வாங்கும் காசை  (100குறோண் ) ஏழைக்கு உதவியாக கொடுக்க  உன் மனமெழவில்லை  எத்தனை  சாட்டுக்கள்  சொல்லி  நழுவுகிறாய்.
இரும்பா  உன்  இதயம் ? அது கூட  நெருப்பை கண்டால்  உருகும்  நீயோ  ஏழைக்கு இரங்கி   உருகாத சீவனானாய் 

1330ஐ  ஔவையை உணர்ந்தால்  இரக்கம் வரும் கொடுக்கும் குணம்  வருமென்று  படியாது இருந்தாயோ   - அவற்றை  படித்திருந்தால் இரங்கா பண்பின்றி நடப்பாயோ - புகழுக்கும்  பாராட்டுக்கும்  தவிக்கும்  உன் மனம்  பரிதவிக்கும் முகங்களுக்கு  உதவ  மறுக்குதே
நீ  இறந்தால் நாட்டில் நாலுபேர் அழவேண்டாமோ  நல்லவன்  நல்லவள்  இவரென்று போற்ற வேண்டாமோ 

நாடகமும்  நாட்டியும் மேடையிலே  நடத்த  பட்டாடையுடன்  பாய்கின்றாய் ; இருள் மேடையிலே  பசியுடன் வாடுவோர்க்கு  நின்  மனவொளியை  காட்ட  மறுக்கின்றாய் .

கோயிலுக்கும்  பூசைக்கும் அர்ச்சினைக்கும் அள்ளி  இறைத்து  என்ன பயன் ; அதை இல்லாதவருக்கு கொடு இரண்டு  மாதம்  பசியாறுவார்,  சாமியும் உன் செய்கை கண்டு வேண்டியதை   அருளும்

எத்தனை  எத்தனையோ  உன் சிந்தையை இரங்க வைக்க  எழுதி  எழுதி  நானும்  களைத்துவிட்டேன்
நீயோ  அசையாத தூணாக  நிற்கின்றாய் - ஆடு  மாடு  மரம்  கூட  அசையும்  நீ  அதனிலும்  கீழானாய்.

 இல்லார்க்கு  இரங்கா  மனிதரை  வள்ளுவரும்  ஔவையும்  வைவதை அறிந்துமா  நீ கண்ணோட்டமின்றி  வாழ்கின்றாய்  - இத்தனையும்  படித்து  உணர்வாய்  அடுத்து வரும்  உதவிக் கோரிக்கைக்கு  உதவுவாய் என்று எதிர் பார்கின்றேன் .

 அன்பான  முகநூல்  உறவுகளுக்கு !!   இதனால்  அறியத் தருவது 

அடியேன் வாழும்  நகரில்   ஏறத்தாழ  200 பேர்  தமிழர்கள்  வாழ்கின்றார்கள்  -  காலமான  தாய்  தந்தையர்  பெயரை  இணைத்து  ஓர்  அவசர  உதவிச்  சேவையை "ஆனந்தமணி"  என்னும் பெயரில்  நடத்துகின்றேன்.    ஊரிலே இன்னலுறும் சில குடும்பங்கள் உதவிக் கோரிக்கை விடும் போது  அதை உள்வாங்கி சகல அத்தாட்சிகளையும் பெற்று  அவர்களுக்கு  தொடர்பு கொண்டு பேசி   இங்கு வாழும்  தமிழன்பர்களிடம் 
அவர்களால்  முடிந்த  நிதியினை  தரச்சொல்லி  பெற்று  நானும்  இயன்றதை நல்கி  உதவி வருகின்றேன்
மின்னஞ்சல்  வழி  கோரிக்கையை  விடுக்கின்றேன் -  மூன்று அல்லது  நான்கு பேர்களைத் தவிர  பொறுப்புடன் உதவுவார்  இல்லை,  இது கண்டே  மேற்கண்ட  வேகலை  எழுதியுள்ளேன்  உங்கள்
கருத்துக்களை  அன்புடன்  வரவேற்கின்றேன் - நன்றி -  வாழ்க நலம்.

ம. இரமேசு - தொன்மார்க்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக