வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

குடியால் தெருவினிலே


குடியால்  தெருவினிலே

நல்ல  பொழுதொன்றில் சேர்ந்திடுவர் நால்வர்
அழகான  வட்ட மேசையிலே குந்திடுவார்
அன்பாக அடுக்கிடுவார்  ஆனந்தக் குவளைகளை 
தெம்பாக  நிமிர்ந்தே தேய்த்திடுவார் குவளைகளை
நயந்து பேசிடுவார் நாலு சுற்று  முன்னே   பின்
நா  தளர்ந்தே  ஆற்றிடுவார்  அகில வெறு சொல்லுகளை
எத்தனை  மேசைகள் கண்டார்   எத்தனை  குவளைகள் கண்டார்
வெற்று  பிதட்டல்கள்  முழங்கிடுவார்  பெரிய வீரர்கள் போல்
கட்டுப்பாடின்றி  வெட்டி  பேச்சுக்கள்  வீணான  நேரங்கள்
பொருளும்  போனது  போதையிலே  புகழும் தேய்ந்தது  போதையினால்
அமுதும்  நாறி  அழகும்  இழந்து  வீழ்ந்தார்  குடியால்  தெருவினிலே

ம.இரமேசு  - தொன்மார்க்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக