வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

முக்கியம்

இந்திய  விடுதலைக்கு  காந்தி மகான்  விவாதங்களால்  வெள்ளையர்களை  வாயடைக்க வைத்த  காலம்
மிக மிக  முக்கிய விடயமொன்றை பேசி  ஒரு நல்ல முடிவுக்கு  வரலாம்  என்ற  வெள்ளையரின் முக்கிய  அழைப்பை ஏற்று  40 கோடி மக்களின்  முக்கிய பிரச்சினைக்கு விடிவெள்ளி  வீழ்த்த மடி வெள்ளி  துறந்த மகான்  ஒடி உடலுடன் குடில் விட்டு  கிளம்பினார். வேக நடையில்  வந்த மகான்
வெள்ளையர்  மாளிகைக்குள்  நுழைந்து  மாபெரும்  நியமனத்துக்கு  முகம் கொடுக்க சென்றார்
பேச்சுக்கள் விவாதங்கள்  பண்புகாத்து  நட்புறவுடன்  நாலு சுவர்களுக்குள் நடந்து  கொண்டிருக்கும் நேரம்   எங்கிருந்து எப்படி வந்தானோ  ஒருவன்  காந்தி மகான்  இருந்த அறைக்குள்  சடாரென 
நுழைந்துவிட்டான் ஓடிவந்த இளைப்பால் மூச்சு வாங்கியபடி ஓங்கிக்குரல்கொடுத்தான்  பாபுஜி  நீங்கள்  சொன்ன   பதின்நான்கு  நாள்  நேற்றுடன் முடிந்து விட்டது  இன்று பதின் ஐந்தாவது நாள் நான்  வெங்காய பஜ்ஜி   சாப்பிடலாந்தானே  எதுவித கோபமோ பதட்டமோ  இன்றி  சிரித்தபடி
மகாத்மா  சொன்னார்  நல்லது  ராசன்  பதின்நான்கு நாள்  முடிந்ததென்றால்  நீ நன்றாக வெங்காய பஜ்ஜியினை  சாப்பிடலாம்   போய்  சாப்பிடுமகனே. மிகுந்த மகிழ்வுடன்   ராசன்
துள்ளிக்  குதித்து  வெளியில்  ஓடினான்  காவலர்கள்  அவனை  பிடித்து    மரத்தில்  கட்டி வைத்து  விட்டார்கள் .

ராசன்  காந்திஜியின் ஆசிரமத்தில்  வேலைகள் பார்த்து வந்த  பாமரன் , நாளும்  வெங்காய பஜ்ஜியை  அதிகமாக உண்டுவந்தே  வயிற்று வலியால்  துடித்தவன்   அவன்  வலி பொறுக்காமல்  அழுது  துடிப்பதைக்  கண்டு  வேதனை கொண்ட  காந்தி மகான்  அவனிடம்  கூறியது  இன்றிலிருந்து  14  நாட்கள்  நீ வெங்காய பஜ்ஜியை சாப்பிடக்கூடாது  அதுவே  உனது  வயிற்று வலி தீர  நான் சொல்லும் உபாயம் என்பது.  அதையே சிரத்தையில் ஏற்றி  அவன்  மகானின்  வார்த்தையை மீறாது   கடைப்பிடித்து  சில நாட்களுக்குள்  குணமடைந்தான்  ஆனால்  வெங்காய பஜ்ஜி  சாப்பிடமுடியவில்லையே என்று கவலைப்பட்டான்  மகானின் சொல்லை தட்டக் கூடாதே  என்று பொறுமை காத்து  14 நாட்கள் முடியவே  மேலே  சொன்ன சம்பவம்  நடந்தது.

காந்தி மகான்  பேச்சு வார்த்தை  முடிந்து வெளியில் வர  மரத்தில் கட்டப்பட்டிருந்த  ராசன்  பாபுஜி
பாபுஜி  என்று  அழுதபடி  கூவினான்  அதை செவியுற்ற  காந்தியடிகள்  காவலர்களிடம்  அவனை 
விடுதலை  செய்ய பணித்தார்   காவலர்கள்   அவிழ்த்து விட்டார்கள் அந்த எளியவனை,  அருகே
சென்ற காந்தியடிகள்  ஆதரவாக  ராசன்  தோளில்  கைபோட்டு  அன்புடன் கூறினார்  மகனே  இப்படி
அனுமதி  இல்லாது   நுழையக்கூடாது  இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று  ராசன்  மகிழ்வுடன்
கண்களை  துடைத்தபடி தலையை ஆட்டியபடி  காந்தியடிகளுடன்  நடந்தான்,  நடந்தவற்றை   அறிந்த  பத்திரிகையாளர்கள் காந்தி மாகனிடம்
வினவினார்கள் -  நாட்டின் விடுதலைக்கான   முக்கிய விடயத்தை
நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்  அதற்குள்  குறுக்கிட்ட இவர்  மீது  உங்களுக்கு  கோபம்  வரவில்லையா என்று    உடனே காந்தி மகான் கூறினார்  எங்களுக்கு ஒரு விடயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல்த்தான்  மற்றவர்களுக்கும்   அவரவர்   விடயம்  முக்கியம், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று .

ம.இரமேசு - தொன்மார்க் 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக