ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை குடங்கருள்  பாம்போடு உடன் உறைந்தற்று 

கருத்து வேற்றுமைகளால்  நொந்து  ஒரே வீட்டுக்குள் மன உளைச்சலுடன்  வாழ்வதை  காட்டிலும்  பிரிந்து  நிம்மதியாக  வாழ்பவர்கள்  குடும்பத்தை  காக்காதவர்களுமல்ல  ஒன்றாக  வாழ்கின்றோம் என்று  வீட்டுக்குள்  அடை  நெருப்பாக  பிரிந்து  மனம் முறிந்து  வாழ்பவர்கள்  குடும்ப  ஒற்றுமையை 
பேணுகின்றார்கள்  என்றும்  கொள்ள முடியாது,  உடல் உறவு   பணம்  இரண்டுமே  பிரிவுக்கு  முக்கிய  காரணமாக  விளங்குபவை  முரட்டுத்தனமான  பெண்ணாலும்  முரட்டு ஆணாலும்  குடும்ப  ஒற்றுமையை  பேண முடியாது  இதில் ஒருவர்  முரடாக  இருந்தால்  குடும்பம்  குலையும் இருவரில்  ஒருவர்  கொண்டுள்ள  அன்பு பாசத்தை  உணரும்  சக்தி  இல்லாவிடில்  பிரிவு  தவிர்க்க முடியாது வெளிநாட்டு வாழ்வில்,   மனைவியுடன் 
மகிழ்வாக  வாழ்கின்றேன்  என்று  பெயர்  வைத்துக்கொண்டு  சந்தர்ப்பம்  கிடைக்கும்  நேரத்தில்  விலை மாதர்களை  நாடும்  ஒருவன்  ஒழுங்காக  
குடும்பத்தை  பேணுகின்றான் மானமுள்ளவன்  என்று  எப்படி சொல்ல முடியும்  ஊருக்கும் உலகுக்கும் நடிப்புகாட்ட  நாடகம்  ஆடி  பிரியாது  வாழ்கின்றோம்  என்று சொல்லிக்கொண்டு  தினம்  வீட்டுக்குள்  ஒடிந்து  வெடித்து சிதறி  வாழும்  வாழ்வை விட  பிரிந்து  செல்லுதல்  இருவருக்கும்  மன நலத்தை தரும்,  குழந்தைகள்  இருந்தால் பிரிதல் பற்றி  எண்ணவே  கூடாது  

                                                                                                                                           திருந்தக்கூடிய தீய பழக்கங்கள் கொண்டவனுடன்   ஒரு பெண்  வாழ முடிந்தாலும்  விலைமகள்  வீடு செல்லும்  ஒருவனுடன்  ஒரு  பெண்ணால்  என்றுமே  வாழ முடியாது  அதனால்  அவளுக்கும்  நோய்கள்  வர  சாத்தியங்கள்  நிறையவே உண்டு  அதுபோலவே  ஆணை  அலட்சியம்  செய்யும்  பெண்ணுடன்  மானமுள்ள  ஆணால்  சேர்ந்து  வாழ முடியாது  
கடவுளான  சிவனாலேயே   பார்வதியின்  அலட்சிய  போக்கை  பொறுக்க  முடியவில்லை  என்னும் பொழுது  சாதாரண  வாழ்வை  வாழும்  இவ்வுலக 
மானமுள்ள ஆண்களால்  எப்படி பொறுக்க  முடியும்  பொறுமைக்கும்  ஒரு  எல்லை  உண்டு  என்பதையும் நோக்க வேண்டும்,  ஒருவனோ  ஒருத்தியோ  தம்  துணையை பிரிந்து  வாழ்கின்றார்கள்  என்றால் அவர்களுக்கு  அறிவில்லை  அல்லது பிறருக்கு  நல்லது  சொல்ல அருகதை இல்லை  என்று  போய்விடுமா அல்லது  அவர்களுக்கு மானம் மரியாதை  இல்லை  என்று  ஆகிவிடுமா , ஒருவரின்  நொந்த  பக்கத்தை  இடித்து  பேசும்  செயல்  எத்தனை  அசிங்கமான  பண்பு  என்பதை  படியாதார்  அறியார் பண்பு மக்கள்  அடுத்தவரின்  நொந்த  பக்கத்தை  இழித்துப்   பேசி  ஒருவரை  வருத்தப்பட  செய்யார்  ஊரில்  என்ன  பிரச்சினை  நேர்ந்தாலும்  எப்படியானவரானாலும்  பொருளாதார  நிலைமையினை  கருத்திற்கொண்டு  பெண்கள்  அடிவாங்கியபடி  ஆணுக்கு  அடங்கி வாழ்ந்தார்கள்  அதை  வைத்து  அவன்  சிறப்பாக குடும்பம் நடத்தினான் என்று 
கூறமுடியுமா,  பெண்ணுக்கு  அடிக்கும் எந்த  ஆணும்  மானமுள்ளவனாக  பண்பாளனாக  இருக்க  சாத்தியமில்லை  மெலிந்தவள் என்ற காரணம்  திருப்பி  அடிக்க மாட்டாள்  என்ற  உறுதியான  நினைப்பே  ஆண்கள்  பெண்கள்   மீது  வன்முறையை  கட்டவிழ்க்க  காரணமாகின்றது  பிடிக்கவில்லையா  பேசிப்பார்  அதற்கும்  பயன் இல்லையா  மரியாதையாக  பிரிந்து செல்  இருவருக்கும் நலம்,  ஊரும்  உலகமும்  அவரவர்  காய்ச்சல்  தலையிடியை  உணராது , அது  என்றுமே  இழித்து பேசவும்  தாம்  பெரிய  மாட்சிமை  பொருந்திய  வாழ்வு வாழ்வதாகவுமே கருதி 
எடுப்புக்கதை பேசும்  அவர்களுக்குள் கிடக்கும் நாற்றத்தை  அவர்களே  முகர்வார்கள்  ஆதலினால்  விவாகரத்து  எடுத்து வாழ்பவர்களை  நிந்தனை  
செய்யாதீர்  அவர்களின்  தனிப்பட்ட  வாழ்வை  சுட்டிகாட்டி  நோகடித்து பேசாதீர் .

வேதனையுடன் 
ம.இரமேசு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக