அரக்கர் யார்?
இல்லை, துப்புரவு ம்கூம் பெருத்த காட்டான் மீசை மூக்குகளை உட்புறம் அழகாக சுத்தம் செய்யிறதில்ல காதுகளும் அசிங்கமா தலைமுடியை அழகா பேணுவதில்லை கைகால்களையும் அப்பிடியே உப்பு பூத்தபடி நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு கர் புர் எண்டு குறட்டை கள்ளையும் கண்டதையும் குடிச்சுபோட்டு பெருத்த வண்டியோட தூசணம் பேசிக்கொண்டு ஆட்களை சேர்த்துக்கொண்டு ஊரெல்லாம் சண்டித்தனம் செய்யிறது
முரடானா அருவாள் கோடாலி துப்பாக்கி எடுத்து இரக்கமில்லாம மற்றவையை வெட்டுறது கொத்திறது சுடுகிறது இப்பிடி எத்தனையோ, சொன்னது பாதி சொல்லாதது மீதி
உண்மையாய் யோசிச்சு பாருங்கோ உங்களுக்கே விளங்கும் நீங்கள் ஆரெண்டு ஆருக்காவது உதவி செய்ய கேட்டா உதவ மாட்டியள் அதுக்கும் இதுக்கும் ஆசை பெரிய அறிவாளியாய் மற்றாக்களுக்கு காட்ட ஆசை புளுகிறது பொய் சொல்றது ஏமாத்துறது நம்பிக்கைக்கு துரோகம் செய்யிறது நக்கல் நையாண்டி கேலி சேட்டை எண்டு அடாவடியாய் எந்த வித நல்ல பண்புமில்லாமல் திரிஞ்சா உங்கள அரக்கர் எண்டு சொல்லாமல் வேற என்னண்டு சொல்வாங்கள் யோசிச்சு பாருங்கோ .
உண்மையுடன்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக