ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

வட்டுக்கோட்டை - ஊர்ச்சிறப்பு 

ஈழத்தின் முக்கிய ஊர்களில் தனியிடம் வட்டுக்கோட்டைக்குண்டு, ஈழத்தாயின் மணிவயிறு வழிவந்த வன்னிய குலத்தினரே அங்கு பெருமெடுப்புடன் பல் கலையும் பயின்று பரிமளிப்பவர்கள் என்பது பொதுவான உண்மை 

வீரபத்திர சிவனை இதயமாக வைத்து சுற்றி வாழும் குடிமக்கள் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று பார் புகழ் சிறப்புடன் வாழ்பவர்கள் 
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தொழிற்றுறைகளில் விற்பன்னர்களாக திகழ்பவர்கள் வட்டூரார்

கல்வி கேள்வி ஞானம் பெற்ற முழு மதியினை ஒத்த மனிதர்கள் வாழ்ந்த பூமி வட்டுக்கோட்டை ஆதலால் அங்கு கல்வியும் கலைகளும் பால் நிலவாக பொழிந்தது அவர்களின் எச்சங்கள் தந்தையர் வழியில் புகழ் பூத்த மலர்களாக இன்று வாசம் பரப்புகின்றார்கள்

சிந்தனையும் செந்தமிழும் ஒன்றையொன்று பின்னியிருக்கும் வட்டூரில், எட்டூர்கள் கேட்க்க ஆலயமணியின் கொட்டாக அவர் தம் புகழொலி பரவியது ஈழமெங்கும் - இன்று புகழுடன் திகழும் சுவாச மருத்துவ நிபுணன் திருமாறன் பாலகிருஷ்ணன் வட்டூர் வாசியே.

மருத்துவம்,பொறியியல்,சட்டம்,கணக்கியல் போன்ற துறைகளில் நாடெங்கும் சிறந்துவிளங்கினார்கள் அவை மட்டுமின்றி சிற்பக்கலை , கட்டிடக்
கலை போன்றவற்றிலும் நாடெங்கும் புகழ் கொண்டிருந்தார்கள் சிற்ப சிகாமணி சிற்ப சக்கரவர்த்தி என அரசாலும் மக்களாலும் அழைக்கப்பட்ட
அமரர் செந்தூர்ராசா வட்டுமண்ணின் மைந்தனே. அவரை அறியாத தர்மகத்தாக்கள் குறைவு.

"காபன்" கந்தையா என்ற மாபெரும் அறிஞர் வாழ்ந்ததும் வட்டூரிலேயே - நாட்டுக்கூத்து என்னும் ஒப்பற்ற கிராமியக்கலையினை இன்றளவும் போற்றிக் காப்பற்றிவருபவர்கள் வட்டூர் கலைஞர்களே - வெளிநாட்டிலும் ஆடுகின்றார்கள் 


இயல் இசை நாடகம் என முக்கலைகளிலும் முன்னேறி பளிச்சிட்டவர்கள் வட்டூர் கலைஞர்கள் , கலைகள் மட்டுமின்றி படகு கட்டுதல் பழுது பார்த்தல் என அடிப்படைத் தொழில்கள் அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள் வட்டூரார்

ஈழத்தின் பல பாகங்களிலும் கட்டிடங்கள் கட்டுவதில் பெயர்போன சிறந்த கட்டுவேலை செய்யும் கலைஞர்களை கொண்டது வட்டூர்
அழகிய பெரிய வீடுகள் கண்ணில் தென்பட்டால் அதன் பின்னால் எப்படியும் வட்டூர் கலைஞர் இருப்பார் என எதிர்பார்க்கலாம்

கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டுதல் நெசவு நெய்தல் ,விழாக்களுக்கு அலங்கரித்தல் ,மின்னிணைப்பு வழங்கல் போன்ற தொழில்களும் குறைவின்றி கோலோச்சியது ,கைப்பந்து கால்ப்பந்து துடுப்பாட்டம் கிளித்தட்டு என பல்வேறு விளையாட்டுகளும் இனிதே வலம் வந்தது

வட்டு சிவன் கொடி ஏறினால் ஊரே பக்திப்பரவசத்தால் திளைக்கும் பல பாகங்களிலும் தொழில் புரிவோர் ஊருக்குள் வந்து நிறைவார்கள் இரவுத் திருவிழாக்கள் கலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு போட்டி போடும் மின்விளக்கால் ஊரே பல வர்ணத்தில் ஜொலிக்கும்

வட்டூர் வராத கலைஞர்கள் யாரென்று கைவிரல் விட்டு எண்ணிவிடலாம் ஈழத்தின் புகழ்பெற்ற தவில் நாதஸ்வர கலைஞர்கள் தொடங்கி நாட்டிய மயில்கள், இசைக்குழுவினர் , வயலின் மேதைகள், நாடக நடிகர்கள், வில்லுப்பாட்டு குழுக்கள் என்று ஊரே கலைஞர்களால் வசந்தமாகும்

வீட்டுக்கு வீடு பரியாரியார்கள் அண்ணாவிகள் வாத்தியார்கள் என்று நிறைந்து விளங்கும் ஊர் , அன்று நாட்டுக் கூத்தில் பங்கேற்ற கலைஞர்கள்
இன்றும் பெருமையாக அழைக்கப்படுகின்றார்கள் ஏற்ற பாத்திரங்கள் மூலம் தருமன், வீமன் அருச்சுனன், இயமன், குதிரை இராமர்,அனுமன் வேடன் என்று

அமரர் முருகவேள் ஆசிரியர் பிரபல நாட்டுக்கூத்து ஆசிரியருமாவார் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது பிற ஊர் கலைஞர்களும் மதித்து போற்றிய கலைஞர் இறுதிக்காலம் வரை நாட்டுக் கூத்தை பழக வந்த அனைவருக்கும் பேதம் பாராது கற்பித்தார்.

அமரர் காசிப்பிள்ளை பரியாரியாரின் பெயரைக் கேட்டால் அவரின் புகழை அறிந்தோர் ஒருகணம் எழுந்து நிற்பார்கள் பின்னர் இன்று கொழும்பில் புகழுடன் விளங்கும் வைத்தியர் சு . கனகரத்தினம் , மருத்துவர் க . ராதாகிருஷ்ணன் (கனடா) மருத்துவர் கைலாயநாதன் போன்று இன்னும் பலர் புகழ்பூத்த விற்பன்னர்களாக வட்டூருக்கு பெருமை சேர்க்கின்றார்கள்.

தொழிலாலும் உறவுமுறைகளாலும் வல்வெட்டித்துறை, தொண்டமனாறு , மயிலிட்டி , தோப்புக்காடு, தம்பாட்டி,ஊர்காவற்றுறை வேலணை,நயினாதீவு, மன்னார், போன்ற பிற ஊரவர்கள் வட்டூரினருக்கு உறவினர்களாக நண்பர்களாக பலகாலமாக திகழ்கின்றார்கள்.

ஆசியாவின் அழகு மணித்தீவின் அற்புதமாம் ஈழவர் நாட்டின் வட்டூர் என்னும் தொன் பழமை கண்ட செவ்வூரில் நற்றமிழ் குடித்து
நலமே நம் மணிகள் வாழியவே .

ஆக்கம்
அன்புடன்
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக