சிந்தனையும் செழிப்பும்
எத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைய செயல் வினைக்கும் சரியாக பொருந்துகின்றது ஔவையின் ஆக்கமும் வள்ளுவர் குறளும் மற்று அறிஞர்கள் ஆக்கங்களும் என்றால் அவர்களின் சிந்தனை வளம் வலிமையானது என்று ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு கருத்துக்கு இடமில்லை
இவ்வுலகில் பிறர் துணையின்றி எவரும் தனித்து வாழ முடியாது பணம் நெல்லாகாது நீராகாது - ஒருவரின் தேடுதலில் உழைப்பில் இன்னொருவர் தங்கியிருக்கின்றார்
ஆதலினால் வளைந்தும் நிமிர்ந்தும் குறுகியும் கூனியும் நிலைமைகளுக்கு ஏற்ப ங போல வாழவேண்டும் என்கின்றார் ஔவையார் , அதன் கருத்து ஓணான் (பச்சோந்தி) போல் வாழ்வதென்று அர்த்தம் கொள்ளக்கூடாது எல்லோரிடமும் பகை இன்றி அவரவர் இயல்புக்கு ஏற்றவாறு நாம் நம்மை சுதாகரித்துக்கொண்டு நடத்தல் நல்லது பாதுகாப்பு என்பதே. அன்புக்கு வளை ஆணவத்துக்கு எதிராக நிமிர் பண்புக்கு சமன் செய் என்பதை எழுத்தின் உருவிலேயே காணலாம்.
ஞானமும் கல்வியும் ஆயிரம் அறிந்தும், கொண்டும் என்ன பயன் வயிறு பசிக்கையில் உணவின்றேல் எல்லாம் தூர விலகிவிடும்
ஐந்துகண்டங்களையும் கட்டியாளும் அரசனென்றாலும் அனைத்தும் தெரிந்த விற்பன்னனென்றாலும் சோறின்றில் சுருங்கி மடிவர். - தேர் கொண்ட மன்னன் எங்கே , பேர்சொல்லும் புலவன் எங்கே, ஏர்கொண்ட உழவன் இன்றி , போராடும் வீரன் எங்கே.
அனைத்தும் ஆகாரத்துக்கு பின்னாலே , உணவில் தன்னிறைவை கண்ட பின்னரே நாடோ மனிதனோ பிற விடயங்களை சிந்திக்க முடியும் - "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே".
வேட்டையாடிய மனிதன் அடுத்துவரும் நாட்களுக்கு மாமிசத்தை பதப்படுத்தி வைத்ததனாலேயே மேற்கொண்டு செழிக்க சிந்திக்க அவனுக்கு நேரமிருந்தது இதன் அடிப்படையிலேயே இன்று சிந்தித்து செயலாற்றும் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கின்றது
அவர்கள் கவனம் அன்றாட தேவைகளின் பக்கம் திரும்பினால் சுறுசுறுப்பு குறைந்து நாட்டு முன்னேற்றத்துக்கு சிந்திக்க முடியாது என்ற உண்மை அதற்குள் புதையுண்டு கிடக்கின்றது,
மனிதனின் பேராசை தன்னை சார்ந்த புறவாழ்வியல் பற்றியே அதிகம் சிந்திக்க வைக்கின்றது இனம் சார்ந்த பிறர் சார்ந்த சிந்தனை அருகிக்கொண்டே செல்கின்றது அளவுக்கு மீறிய ஆடம்பரங்களை வாழ்வுக்கு அறிமுகம் செய்ய செய்ய வியாபாரம் பெருகி மனிதம்
குறைந்து செல்கின்றது என்பதனை அறியலாம்
யாதும் ஊரே யாவருங்கேளிர் என்ற கணியன் பூங்குன்றனைப்போல விரிந்த இதயம் கொண்டவர்கள் இன்றைய உலகில் விரல் விட்டு எண்ணிவிட கூடியவர்களே இருப்பர்.
நச்சை பரப்பி சக மனித உயிர்களை கொலைசெய்யும் நச்சு எண்ணம் கீழ்த்தரமானது அதை செய்வோர் மேலான நாற்காலிகளில் இருப்பது சகிக்கமுடியாதாது .
கொடுமைகள் அநீதிகள் செய்வோர் அதற்காக வருந்துவதுமில்லை தான் செய்யும் இழிசெயல்களுக்காக கண்ணீர் சிந்துவதுமில்லை
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் ; நெஞ்சத்து அவலம் இலர்" எத்தனை உண்மை இதையே கண்ணதாசனும் சொன்னார் - தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே என்று தங்கள் அதிகாரங்களை தொடர்ந்து நீடிக்க மனிதாபிமானம் அற்று செயலாற்றும் செயிலினை காட்டிலும் பதவியை துறந்து சந்நியாசியாகலாம் என்றே தோன்றுகின்றது .
சிந்தனைகளுடன்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக