வன்னியில் கண்ட கொடூரம் மூன்று நோக்குகள்
April 20, 2014
பேசிப்பேசி எழுதியெழுதி ஒருவராலும் முடிக்கமுடியாத இதயத்தில் விழுந்த வேதனை வடுக்கள் நாம் வன்னியில் கண்ட கொடூரம் நம் மண்ணில்..
இப்படி ஒரு மனிதப் படுகொலை இராட்சத மனித அழிப்பு நிகழும் என்று கனவிலும் கண்டிருக்கமுடியா அவலமது..
நலம் சூழ்ந்த வளமண்ணில் வாழ்ந்த தமிழர்கள் வாயடைத்து நிற்க இதுதான் சமயம் சிதைக்க எனக் கருக்கொண்டோர் சிதைத்து சின்னாபின்னமாக்கி தமிழர்களை அவர்கள் தம் இன்ப வாழ்வை மண்மூடி நிறைத்தார்கள்.
இன்று ஒரு அழகான சிறுமி வன்னி மண்ணில் கொடியோர் செயலால் தனது கால்களை இழந்தும் தனது மன வைராக்கியத்தின் ஈடுபாட்டால் புலமைப்பரிசில் தேர்வில் வெற்றி பெற்று கல்வியில் தேறி இருக்கும் காட்சி கண்டு மனம் நெகிழ்கிறது.
இதுதான் மனித வெற்றி. நமக்கு கால்கள் கைகள் கண்கள் காதுகள் சரியாக இருந்தும் எத்தனை பலவீனங்கள் வாழ்க்கையில் நம்முடன் ஒப்பிட்டால் கெங்காதரன் பவதாரணி – கலைமகள் வித்தியாலயம் . முள்ளியவளையில் தரம் 6இல் கற்கின்றார்அவள் சாதனை சிகரம் .
மனம் போனபடி அறிவை சரியாக பயன்படுத்தாது எல்லாம் புரிந்தும் புரியாமல் வாழ்கின்றோம், என்ன நடக்கின்றது என்பது நமக்கே இருட்டாக தெரிகின்றது.
வழி பிழை என்று திருத்தினாலும் நம்மை அறியாது ஒரு மடமை வந்து சூழ்கின்றது என்பதை அனுபவத்தில் கண்டவர்கள் மட்டுமே அறிவார்கள்.
பெரும் அறிவாளர்கள் சிந்தனைச் சிற்பிகள் தங்கள் சொந்த வாழ்வை அழகாக வாழத்தெரியாது அல்லல் பட்டு இறந்திருப்பதை வரலாறு சொல்லி தருகின்றது நமது காலத்தில் கவிஞர் கண்ணதாசன் பட்ட துன்பங்கள் பெரிது என்பதை அவரே கைபட எழுதிக் காட்டியுள்ளார் என்பது அனைவருக்கும் எடுத்துக்காட்டாகும்.
எல்லாம் அறிந்த தர்ம ராசாவும் சூதாடி எல்லாம் இழந்தார் ஊழின் பெரு அடிக்கு ஆளாகாதார் ஒருவருமில்லை எமது முயல்வுகள் மட்டுமே எங்களை உயர்த்தும்.
உயர்ந்த இடங்களில் இருந்தே நமது உய்வுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றது உயர்ந்த இடங்களில் இருப்போர் கீழே இறங்கி வந்தாலே மனிதகுலம் உய்யும் இல்லையேல் அழிந்து ஒழிவதே முற்றாகும்.
நதியின் இறக்கம் நீரைப் பருக வழிவகுப்பதை எளிதாக நோக்கின் அனைத்தும் புரியும் உயர்ந்த வானிலிருந்து கொட்டும் புனலால் மண்ணில் அனைத்தும் விளைகின்றது மழை மட்டும் கொட்டாவிட்டால் மண்ணுலகம் மயானமாகிவிடும் உலகம் தோன்றியதிலிருந்து மழை கொட்டுகின்றதால் இன்றளவும் மானிடம் வாழுகின்றது.
ஆனால் மனிதனை மனிதனே அழிக்கின்றான் என்பதே அறிவுக்கேடு அறிவியலில் பெரிய இடத்தை அடைந்துவிட்டதாக மார்பு தட்டி என்ன பயன்..?
அயலாரை அமைதியாக வாழச் செய்யத் தெரியாத அறிவால் வெறுமனே உபகரண கண்டு பிடிப்பினால் மனிதகுலம் நிம்மதி அடைந்து விடுமா – ஆழ்ந்த ஞானம் இருப்பவர்களிடமே இன்னொரு உயிருக்கான சுதந்திரம் நிம்மதி என்பன எத்தனை முக்கியம் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
அதை படித்து உண்மையாக ஒழுகின் அனைவருக்கும் உண்டாகும் சாந்தி சமாதானம் நல்வாழ்வு என்பதனை அறிவில் சிறந்த அரசியலாளர்கள் உணரவேண்டும் .
அனைவரையும் நிம்மதியாக வாழவைக்க அயராது பணியாற்றவேண்டும் அகிலம் குளிரவேண்டும் அனைவரும் மகிழவேண்டும் .
அன்புடன்
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக