காய்ந்த பூக்கள் (1)
கிழவனும் கிழவியும் ஆளையாள் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்தனர் கிழவன் வாயில் வெற்றிலை அரைபட கிழவி பாக்கை குடுவையில் போட்டு இடித்துக்கொண்டே இடைக்கிடை கிழவனை பார்த்தா உடலில் பலமிருந்தபோது கிழவன் கிழவியை எப்பொழுதும் அணைப்பதிலேயே குறியாயிருந்தார் அது கிழவிக்கும் பெரும் மகிழ்வை கொடுத்தது இன்பவாழ்வு அன்பெனும் நூலினூடாக நகர்ந்து வந்தது இப்போதும் கிழவனுக்கு உள்ளத்தில் ஆசையுண்டு உடலில் தெம்பில்லை காலவோட்டம் தந்த முதுமை அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது .
ஒண்டரை சுண்டு அரிசியை போட்டு மூண்டு திரளியில அரைச்சகுழம்பு ரெண்டு திரளியிலசொதி வேலிக்கு நட்ட வாதனாராணியிலையை ஒடிச்சு றால் போட்டு வறை என்று அவர்கள் நாட்கள் நகர்ந்தது எனக்கென்னவோ இந்த பெரிய கல்வீடு
பிடிக்கேல்லை பழைய வளவுக்குள்ள இருந்த மண்வைச்ச சுவரும் ஓலையாலை வேஞ்ச குடிசையுந்தான் நிம்மதி அதிலதான் குளிர்ச்சியும் இருந்தது என்று அடிக்குரலில் கிழவன் அடிக்கடி இருமி இருமி கிழவியிடம் சொல்லி கொண்டிருந்தார் என்ன செய்யிறது தான் உழைச்சு கட்டின இந்த கல்வீட்டிலதான் நாங்கள் இருக்கவேணுமெண்டு சொல்லிபோட்டு பெடி போய் கொழும்பில வாடகை வீட்டில இருக்குது இஞ்சை மாற்றம் கிடைச்சா பெடி இஞ்சை வந்துவிடும் எங்களுக்கும்
நிம்மதி பிள்ளையை பாத்துக்கொண்டே இருக்கலாம் நாங்களும் பழைய குடிசை வீட்டுக்கு போகலாம் ஆனா பெடி எங்கள அங்கை போகவிடான் என்றா கமலக்கிழவி

ஒட்டற்ற பேத்தியை கேட்டு வந்தது என்ன சொல்ல என்றா கிழவி என்னவோ அவனுக்கு கடிதத் துண்டை போட்டு கேள் என்றார் கிழவனார்
சோடாக்கடையில போய் சிவத்திட்ட சொல்லு பெடி கடிதம் எழுதி போட்டுவிடும் அவனிட்ட அட்ரசும் இருக்கு நீ அனுப்பிற காசு குடுத்தா
போது மென்றார் கிழவனார் இந்தா கிளம்புறன் என்று சொல்லிக்கொண்டே கிழவி நடையை கட்டினா சோடா கடைக்கு
நாலுபேர் கடையில் சாமான்கள் வாங்க நின்றார்கள் கிழவி குந்தியிருந்து வெத்திலையை மடிச்சு போட்டு ரெண்டு துப்பல் துப்பி முடிய ஆட்கள் நகர்ந்தனர்
சமயம் நோக்கியெழுந்த கிழவி தம்பி என்று நீட்டி எல்லா விசயத்தையும் நாலாம் பேருக்கும் தெரியாமல் சொல்லி காசையும் குடுத்துபோட்டு திரும்ப வீட்டுக்கு நடக்கவும் முடக்கில திரும்பின சாந்தம்மா கிழவியை கண்டு குஞ்சி குஞ்சி என்று கத்தி கூப்பிட
கூப்பிட்ட சாந்தம்மாவை மெதுவாக திரும்பி பார்த்த கமலக் கிழவி சிரிசுக்கொண்டே நிக்க உங்கையெல்லாம் உலாத்தா தெரியும் எங்கண்டை வீட்டை
மட்டும் வர ஏலாதாக்கும் ஆ என்றா சாந்தம்மா
எடி பிள்ள நான் எங்கையடி உலாத்துறன் ஒரு முக்கியமான அலுவல் அதுதான் வெளிகிட்டனான் எங்களுக்கு தெரியாமல் அதென்ன முக்கியமான அலுவல் வீட்டை வாவன் சொல்றன் இஞ்சிநேயுக்குள்ள பறையிறவிசயமில்ல வீட்டை வா என்றா கிழவி ஐயோ நான் சித்தங்கேணி வசுவை பிடிக்கவேணும் வார கிழமை வாறன் என்றுவிட்டு சாந்தம்மாதனக்குள் என்னவா இருக்கும் என்ற சிந்தனையுடன் பஸ்ஸை பிடிக்க வேகமாக நடந்தா
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக