முத்தம்
பொது இடங்களில் இதழ் முத்தம் தேவையா - யாரோ ஒரு நரியன் தனது காதலி இவள் இவள் அழகி யாரும் இவளை நெருங்காதீர் என்பதற்காக மற்றவர்கள் முன்னிலையில் முத்தம் கொடுத்திருக்க வேண்டும் அதை நல்ல சாதுரியம் என நினைத்து சில பண்பிலிகள் தொடர்வது அசிங்கம்
அட அறிவிலிகளா ! படுக்கையறை என்று ஒரு புனித இடமுண்டு வீட்டில் அங்கே வைத்து நிகழ்த்தவேண்டியவற்றை நடு வீதியிலும் அங்காடிகளிலும் அணையும் இடங்களிலும் நடத்தலாமா அசிங்கமில்லை? வானூர்தி நிலையத்தில் என்னை எனது அம்மா கன்னத்தில் கொஞ்சி மகிழ்ந்தா அப்பாவும் சகோதரர்களும் சகோதரிகளும் அங்ஙனமே அதிலே அன்பு மட்டுமே இருந்தது அதை யாரும் அசைவ கண்ணோடு நோக்கவில்லை நோக்கவும் மாட்டார்கள் ஆனால் பொது இடங்களில் காதலர்கள் வாய் சேர்க்கும் அசைவ முத்தம் பிறரால் பலவேறு உணர்வுகளுடன் நோக்கப்படும் காமவிகாரம், பொறாமை,ஆத்திரம் என பட்டியல் நீளும், பக்குவம் பண்பு உள்ளவர்கள் இப்படியான முத்தங்களை
பொது இடங்களில் நிகழ்த்துவதில்லை நிகழ்த்துபவர்களை நோக்குவதுமில்லை தமிழர்களுக்கு முத்தம் என்றால் இன்று நினைவுக்கு வருபவர் கமல
காசன் அவரே முத்தத்தை குத்தகைக்கு எடுத்து விதம் விதமா திரையில் காட்டுகின்றார் அமெரிக்க ஐரோப்பிய கலாசாரத்தை அரசியலை ஏன் அனைத்தையும் தமிழ் உள்ளங்களுக்குள் விதைத்துவிட கமல் அண்ணாச்சி காட்டும் அயரா உழைப்பு அவரின் பிழைப்பு அதி மேதாவித்தனம் அதை
ஆ வென்று நோக்கி வழிமொழியும் ஆதரவாளர்களுமுண்டு - சித்தம் தெளிவுற ஞான நல்வழி பயின்ற நல்லோர்களினால் நைந்துவிடும் நாட்டியத்துக்கு தலையாட்ட முடியாது தமிழருக்கு ஏது கலாசாரம் பண்பாடு என்று கேட்க்கும் முந்தநாள் முளைத்த அறிவாளர்களுண்டு எனது அம்மா அல்லது அப்பா வேறு ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ முத்தம் கொடுத்துக்கொண்டிருப்பதை என்னால் பார்த்து சகித்து வாழ முடியாது அதை சகித்து வாழ்பவர்களை தமிழர்கள் என்று சொல்ல முடிவதில்லை வசதிகள் கூடியவர்கள் பலர் எந்த நன்நெறிகளுக்கும் இலகுவில் கட்டுப்படுவதில்லை பணம் அவர்களை தூக்கி நிறுத்தும், பணத்துக்கு அடிமிதியாகுவோர் இருக்கும்வரையில் பண்பாடு சேறாகும்
எனக்கு ஒரு அம்மா ஒரு அப்பா என்றே வாழச் சொல்கின்றது என் தமிழ் அது பிழையான கற்பித்தல் என்று சொல்லும் சோத்திகளின் பாத்திகளில் எனக்கு இடம் வேண்டாம் வசதிகள் உண்டு என்பதற்காக நேர்வழி செல்லாது குறுக்கு வழியில் வாழ்க்கை அமைத்து வாழும் சுகம் எனக்கு வேண்டாம் அறிவுமேதைகளே , பன்றிகள் சேறுகள் எங்கணும் மேயும் பசுக்கள் புற்தரைகளில் மட்டுமே மேயும் நான் பசுவை போன்றவன் சேறு சகதிகளை நக்கமாட்டேன் இங்கே நான் என்பது இதை வாசிக்கும் ஒவ்வொருவரையுமே குறிக்கும், ஏற்புடையோர் தொடர்வர் அகிதிலர் நிறுத்துவர் தொடரார் என்பதுமாகலாம் , முத்தம் சத்தமில்லாமல் அறத்தின் நிலைப்படி ஏற்றதொரு இடத்தில் அமைதலே தமிழர் பண்பாடு
அதை அறியார் அறியார், வரையறைகளுக்கு அப்பற்பட்டவர்களின் செயற்பாடுகளைக் காவி நல்ல தூய இதயங்களில் விதைப்பதும் ஒருவகையில் பாரிய குற்றமே.
தமிழின்வழியில்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக