நெஞ்சின் உண்மையுடன்
திரையில் வைக்கப்பட்டுள்ளது உழைப்பு அதை மதிப்பதும் விடுவதும் உங்கள் பொறுப்பு
22/03/2014 என் வாழ்வில் பெரும் மகிழ்வான நாள் நான் முதல் முதல் நடித்த - உயிர்வரை இனித்தாய் திரைப்படம் டென்மார்க் கேர்ணிங் நகரில் இரண்டு
திரைகளில் காண்பிக்கப்பட்டது என்னை திரையில் பார்த்து மகிழ்ந்தேன் இப்படி பிரமாண்டமாக இருக்கும் என்று படம் பிடிக்கும் பொழுது நான்
நினைக்கவில்லை, அற்புதம் - கே எஸ் துரை என்னும் பிரபல கலைஞர் ஆசிரியர் பன்முகம் கொண்டவர் படத்தை அருமையாக இயக்கியுள்ளார் வசந்த் - நர்மினி ஆகியோர் நாயகன் நாயாகியாக
அற்புதமாக நடித்திருக்கின்றார்கள் இன்றைய கால ஓட்டத்தில் ஒரு வெளிநாடு வாழ் இளம் பெண்ணின் காதலையும் விரக்தியையும் மாறுபட சொல்கிறது கதை
நாயகி தான் ஏற்ற பாத்திரமாக மாறி இரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளி வாங்கியுள்ளார் நாயகன் முற்றிலும் எதிர்பாரா கதாநாயகன்
வழமையாக நாம் காணும் 10 பேரை அடித்து துவைக்கும் முரட்டு ஆள் அல்ல சிரிக்க வைக்கும் ஒரு சராசரி பொடியன் போல நாயகன் அசத்தியிருக்கின்றார் அதை நுணுக்கம் நிரம்பிய கண்ணோடு பார்த்தாலே புரியும் ஆனாலும் நாயகி தன் அபார நடிப்பால் முந்தி நிற்கின்றார் முதல் படத்திலேயே வெற்றி கொடி கட்டி விட்டார் இன்னும் 25 ஆண்டுகள் இவர்கள் நாயகன் நாயகியாக வலம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
வாழைப்பழம்
பாத்திரத்தில் சுபேந்திரா சிரிக்க வைத்து இன்றைய தமிழக சிரிப்பு நடிகர்களை முந்திவிட்டார் இனிமேல் அவருக்கு வாழைப்பழம் சுபேந்திரா என்றே சுட்டப்படும் என்பதில் படம் பார்த்த ஒருவருக்கும் ஐயமிராது -- நாயகனின், நாயகியின் அப்பா அம்மா வேடங்களில்
நடித்தவர்கள் தொழில் முறை கலைஞர்களையே தூக்கி அடித்துவிட்டார்கள் தங்களின் ஈடுபாடான அற்புத நடிப்பால், இரமேசு! பெரிசு பாத்திரத்தில் வந்து இரண்டே காட்சியில் நடித்தாலும் நெஞ்சில் நிற்கின்றாய் என்று என்னை இரசிகர்கள் பாராட்டினார்கள் நகரசபை உறுப்பினர்
பதவியில் இருக்கும் அரசியலாளர் நண்பர் ஜெயக்குமார் என்னை பலதடவைகள் பாராட்டியதோடு நின்று விடாது காட்சியின் பின் நடந்த விமர்சன கருத்தரங்கிலும் என்னை பாராட்டி எனக்கு பெரும் இனிப்பை ஊட்டிவிட்டார் எனக்கு பொறுப்பையும் அதிகரித்துவிட்டார் அடுத்த தயாரிப்பில்
எனக்கு நீண்ட பாத்திரம் தருவதாக இயக்குனர் அவர்களும் சொல்லி என்னை பாராட்டியது என் வாழ்வில் நான் பெற்ற பேரின்பங்களில் ஒன்று
என்பதை மிகுந்த அடக்கத்துடன் இயம்புகின்றேன் என்னை பிடித்த உயிர்வரை இனித்தாய் காய்ச்சல் இன்னும் நிற்கவில்லை, பூங்காவில் புகைத்தபடி வந்து அட்டகாசம் செய்பவரை கண்டித்து நாயகி விரட்டும் காட்சி அருமை அதில் அவரின் உண்மையான அப்பாவே நடித்திருக்க அதை எள்ளளவேனும் நினையாது பொதுநலம் பேணும் பெண்ணாக அசத்தியுள்ளார் நர்மினி இப்படி பல இடங்களில் தனது நடிப்பை தூக்கி எழுப்பியுள்ளார் ,கவிதை படிக்கையில் அவர் காட்டும் முக பாவங்களுக்கு நான் மட்டும் கோடீஸ்வரனாக இருந்தால் சில கோடிகளை பரிசாக
கொடுத்திருப்பேன், ரோஜாவை பிரிக்கும் நாயகனின் செயலை பார்த்து நாயகி சொல்லும் சொல் நாகரிக பண்பின் உச்சி அதை எழுதிய ஆசிரியருக்கு என்ன கொடுத்தாலும் குறைவே, இப்படி நிறைய நிறைய இருக்கின்றது இந்த உயிர்வரை இனித்தாய் படம்பற்றி பேச ஒருமுறை
பார்த்துவிட்டு புளுகின்றி இவ்வளவு எழுதும் நான் மீண்டும் மீண்டும் பார்த்தால் இன்னும் நிறைய எழுதலாம், பொய்யும் புளுகும் எழுதி சோறு
சாப்பிட வேண்டிய நிலையில் என்னை டென்மார்க் வைக்கவில்லை என்பது உண்மை ஆகையால் இங்கு எழுதிய அத்தனையும் உண்மை இல்லை பொய் எழுதினாய் என்று உலகத்தமிழன் ஒருவன் குற்றம் சுமத்தினால் அவனுக்கு பதில் சொல்ல என்றும் தயார்.
150 - 200 கோடிகளை கரைத்து ஜிகினா புளுகு புளுகும் திரை வியாபாரிகளின் முகத்திரையை விலக்கி உண்மையை பாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் நிரூபித்துள்ளார்கள் இங்கே பணி புரிந்தவர்களுக்கு உதவியாள் இல்லை ஒப்பனை ஆளும் இல்லை ஒவ்வொரு கலைஞனும் பன்முக ஆற்றல் வாய்ந்தவர்களாக தலைக்கனம் இல்லாதவர்களாக இருந்ததால் தங்களை அவர்களே எல்லா நிலைக்கும் தயார் செய்து கொண்டார்கள் அத்தகைய ஆற்றல் கொண்டவர்களை தனது அனுபவ ஞான ஆற்றலால் உள்வாங்கியவர் இயக்குனர் கே எஸ் துரை
பாரிசில் இருந்து வந்த இரா குணபாலன் தயாநிதி ஆகியோர் படத்துக்கு பாயசமாக அப்பளமாக ஊறுகாயாக இருந்து சுவையூட்டியிருக்கின்றார்கள்
ஒரு சிறுவனும் படத்தில் தன்பங்கை அடிதூள் கிளப்பியுள்ளான் எனக்கு பக்கத்தில் இருந்து படம் பார்த்த அச்சிறுவன் தான் வரும் இடங்களை சிரித்து மகிழ்ந்து இரசித்த காட்சியை நான் கண்டு இரசிக்க இறைவன் எனக்கு வாழ்நாள் பயன் கொடுத்தமைக்கு நன்றி .அவன் கரங்களை பற்றி அவனுக்கு மகிழ்வை தெரிவித்தேன் அவன் கைகள் குளிராக இருந்தது காரணம் அவன் பெரிய சோழன் பொரியலை (போப் கோன்) வைத்து சுவைத்தபடியே படத்தை இரசித்தான் தான் படத்தில் வந்த இடத்தில் சோழனை சுவைக்க மறந்து கையை வெளியில் வைத்திருந்தான் அப்பொழுதே நான் அந்த பிஞ்சின் கையை அன்பாக பிடித்தேன் அதுகணமே குளிர்ந்து என்பதை அறியலுற்றேன் மனம் நெகிழ்ந்தது
படத்தின் அதி உச்சம் பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதங்களுமே மட்டுமின்றி கதையை ஒட்டியே வரும் பாடல்களின் கருத்தாழமுமே
பண்பாட்டுக்கு இழுக்காக எழுதும் பாடலாசிரியர்களுக்கு இலட்சங்களில் ஊதியம் கொடுக்கும் தமிழர்களே இப் படத்துக்கு எழுதியவர்களுக்கு
என்ன கொடுக்கப்போகின்றீர்கள் இறுவெட்டுக்களை வாங்கி பாட்ல்களை இரசிப்பதே நீங்கள் செய்யப்போகும் மரியாதையாகவிருக்கும்
பின்னணியில் இயங்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் ஆற்றல் உலக தரத்துக்கு ஈடானது என்று நெஞ்சை நிமிர்த்தி எங்கும் சொல்ல தயாராக இருக்கிறேன் அதற்கு எனது 42 ஆண்டு திரைப்பட இரசனை பலம், டெசூபன் என்ற இளந்தமிழன் செய்த வேலையை உலக இயக்குனர்கள் கண்ணுறுவராயின் அடுத்த நொடியில் அவன் டாலரில் இலட்சங்களையோ கோடிகளையோ எண்ணி வாங்கும் ஆளாவான் மென்மையான
தோற்றம் இளமல்லிகை சிரிப்பு என்று பண்பின் சிகரமாக பிரகாசிக்கும் டெசூபன் திறமையோ திறமை, யார் யாருக்கோ எழுவாயும் இன்றி பயனிலையும் இன்றி காசு உள்ளதால் பெரிய விருதுகள் கொண்டாட்டங்கள் கொண்டாடுகின்றார்கள். உலகத்தமிழா ! பார் ஒருமுறை, புலம் பெயர் தமிழன் படைப்பை சமைப்பை பிறகு சொல்லு நெஞ்சின் நீதியின் படி உன் கருத்தை , இங்கே யாரும் பகட்டு காட்டவில்லை பொய்யாக
நெளிந்து சுழிந்து புளுகவில்லை, திரையில் வைக்கப்பட்டுள்ளது உழைப்பு அதை மதிப்பதும் விடுவதும் உங்கள் பொறுப்பு ,.உலகெங்கும் வாழும்
தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களில் உயிர்வரை இனித்தாய் படத்தை திரையிட்டு கண்டு களிக்கவேண்டும் என்பதே புலம் பெயர் கலைஞர்கள்
கபடமின்றி அன்புடன் வேண்டுவது. - குறிப்பாக சொல்லும் பொது நியதி - நெல்லுக்கும் உமியுண்டு நீருக்கும் நுரையுண்டு ஆதலால் படத்தில்
சில சில சறுக்கல்கள் இருக்கலாம் ஆனால் நாயகி தனது நடிப்பால் அனைத்தையும் சீராக்கி விடுகின்றார் என்பதே முடிவான உண்மை .
படம் பார்த்து முடிந்ததும் உங்கள் நெஞ்சில் ஓங்கி நிற்பவர் நாயகி நர்மினி நர்மினி நர்மினி நடிப்பு நடிப்பு நடிப்பு உயிர்வரை இனிக்கும்.
நெஞ்சின் உண்மையுடன்
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக