புதன், 19 மார்ச், 2014

காலம் தந்த குரல் வள்ளல் காலமானாரோ !

உன்னையே நீ அறிந்தாய் உலகுக்கு தேன்வார்த்தாய்
என்னையே நான் தந்தேன் ஐயா எனையாட்கொண்டாய்
மண்ணையே பொன்னாக்கும் செந்தேன் நின் குரல்வளம்
மண்ணில் இனியார் பாடுவார் உன்போல் விண்போல்

பாட்டுக்கு ராஜாவாக இருந்தீரே பழனி முருகனடிசென்றீரோ
நாட்டுக்கு நல்ல குரல் காட்டினீரே நானிலமும் மகிழ்ந்ததுவே
போதுமென்று நினைத்தீரோ முருகன் பொற்பாதங்கள் பணிந்தீரோ
உம் பிரிவால் எமையழுக செய்தீரே செவிகளும் துடித்ததுவே

விண்முட்டும் குரெலெடுத்து வீசிநீரே வெண்மேகம் கலந்தீரோ
கண்முட்டும் காலம்வரை கேட்டிடவே கம்பீர குரல்தந்து போநீரோ
மண் மாந்தர் சேவைமுடித்து விண்ணுலக சேவைக்கு சென்றீரோ
இனியெந்நாளும் உன்போல பாட்டிசைக்க இனி யார்வருவாரோ

சிவலோக பதவி பெற்று அந்த ஈசுவரனை குரலால் மயக்க சென்றீரோ
பாட்டு மன்னன் வருகை கண்டு பரந்தாமன் பதாகை வைப்பானோ
முருகன் மயிலேற்றி ஏழுலகும் கேட்க்க இசைத்திடு என்பானோ
இந்திர லோகத்துக்கு இன்குரல் வந்ததென்று இந்திரனும் மகிழ்வானோ

எந்திரமும் வாய்மூடும் உன்குரல்கேட்டால் எந்த தந்திரமும் இனிக்காது
எங்கள் டி எம் எஸ் குரல்போலே இனி இன்னொருவன் இவர்போலில்லை
நல் வேல்முருகன் பக்தன் தன் குரலால் தமிழாண்ட கோமான் 
அவர் உண்மை அமைதி கொள்ள அவர் முருகன் துணை செய்வான்

ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி

ஆக்கம்
டி எம் எஸ்
பித்தன்
ம. இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக