மனித மகான் "ராஜா ராம் மோகன்ராய்"
மதத்தால் மயங்கியோரை விழிக்க கூவிய சேவல் "ராஜா ராம் மோகன் ராய்"14 ஆகஸ்த்து 1774 ல் வங்காள மண்ணில் விளைந்த மனித மாணிக்கம் ராஜாராம் மோகன் ராய் பெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கல்வி கேள்விகளில் நிறைந்த மனிதர்
புதிய இந்தியாவை நிறுவியவர் என்று அழைக்கப்பட்டவர் முதன்முதலில் 1828 இல் பிரம்மசமாசம் என்னும் சீர்திருத்த இயக்கத்தை தொடங்கியவர்
இந்துமத சமய சடங்குகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக போராடியவர் நோக்கம் நன்றென்றால் நன்றாம் பிறரை நோகடிக்கும் என்றால் தவறாம் என்று நெஞ்சை நிமிர்த்தி போராடிய மறுமலர்ச்சியாளன் மானிட யோகி மனிதாபிமானி எட்டு மொழி அறிந்த அறிஞன் பண்பாளன் பாசச்சூரியன் பாரத மைந்தன் இருண்ட நெறிக்கு வெளிச்சம் காட்டி கொடிய செயல்களுக்கு மூடு விழா எடுத்த மூதறிஞன் "ராஜாராம் மோகன் ராய் " மனித குலம் குறிப்பாக இந்திய பெண்ணினம் போற்றவேண்டிய பேராளன் பெருமனிதன் சந்தண மனமுடையோன் சமதர்ம வாதி சக்கரக்கோலோன் சனாதனத்தில் திருத்தம் கண்ட சாவி ஊரார் உறங்கையிலே உன்னத விடியலுக்காய் விழித்து கூவிய சேவல்
ஆண்களின் பாலியல் கொடுமை தாங்காத சில மனைவியர் தங்கள் கணவன் மார்களுக்கு உணவில் விடம்
வைத்து கொன்றிருக்கின்றார்கள் அதனை அறிந்த ஆண்கள் தங்களுக்கும் தமது மனைவியர்கள் துரோகம் செய்தால் என்ற பயத்தில் இயற்றப்பட்டதே உடன்கட்டையேற்றும் கொடும் சட்டம் இதனை மதத்தின் சடங்காக்கியது மகா கொடுமை , தர்மம் சொல்லும் நெறிக்கு கட்டுப்பட்டவர்களே அநியாய கொடுங் கொள்கையை வகுத்தார்கள் என்ற இழி சொல்லுக்கு இந்து மத மேதாவிகள் தள்ளப்பட்டார்கள், மனிதனை மதம் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அதை சமூகம் அங்கீகரித்து நடக்க பொய்க்கதைகளை சொல்லி நம்ப வைத்து ஏமாற்றியது, மதத்தை சடங்கை ஒப்புக்கொள்ளா மனிதர்களை சமூகம் அது இதுவாகவே நோக்கியது தள்ளியும் வைத்தது கணவன் இறந்தால் பெண் வெளியே வரத் தடை வந்தால் சகுனம் பார்த்து ஒதுங்குதல் என்று அறிவுக்கு எட்டாத செயல்களில் இன்றும் இந்து தத்துவங்கள் பாய்கின்றது மதத்தை காட்டி பிழைக்கும் சோம்பேறிகளின் வழக்கு அவர்களின் சீரான வாழ்வியலால் வெல்லப்பட்டது அதற்கு ஒழுங்கீனர்களாக வாழும் பெருங் கூட்டத்தினர் உரம்போட்டு வளர்த்தெடுத்தனர் என்பதே வெளிச்சமான உண்மை நான் நானாக நடக்க மண்ணில் சுதந்திரமில்லை இறைவன் என்பவனே ஒத்துக்கொள்ள மாட்டாத சடங்குகள் உண்டாக்கப்பட்டு அதை இறைவன் பெயரால் நடைமுறையாக்கி ஒரு கூட்டம் தங்களை வல்லாதிக்கமாக்கி கொழுத்து நிற்கின்றது
ஆக்கம் செய்யும் கருவிகள் கண்டுபிடிப்பதில் நேரம் செலவாகாது விழாக்களிலும் சடங்குகளிலுமே மக்கள் நேரத்தை செலவிட்டார்கள் பொறிகள் இணைக்கப்பட்டு நாட்டு மக்களின் வாழ்வியல் இலகுவாக்க வழிகள் காணப்படவில்லை தொழிலில் பாகுபாட்டை புகுத்தி சாதிகள் பிரித்து
சண்டைகள் போட்டு அறிவினை பின் தள்ளி மானிடம் மந்தமானதே மதத்தினால் ஏற்பட்ட விபரீதம் என்பதனை வரலாறுகள் சொல்லி நிற்கின்றன இதே நிலையில் இல்லாது வெள்ளையர்கள் ஆக்க வேலைகளில் அறிவை செலவு செய்து அகிலம் வெல்லும் பலம் பெற்று
இன்று நிமிர்ந்து நிற்பதனை பார்த்து மெச்சுகின்றோம் வெள்ளையன் சொன்னால் செய்தால் சரியாக இருக்கும் எனுமளவிற்கு நினைக்க
வெள்ளையர்கள் வளர்ச்சி சகல துறைகளிலும் கோலோச்சுகின்றது நம் முன்னோர்கள் தியான ஞான மொழி விற்பன்னம் கண்டார்களே
தவிர நடைமுறை வாழ்வியலுக்கான கருவிகள் படைப்பதில் முன்னேற்றம் காணவில்லை என்பதே உண்மை அதனால் நமக்கு நல்ல சந்தைகள்
கிட்டாது நாடும் பறிபோனதே வரலாறு நமக்குள் இருக்கும் அறிவீனங்கள் துடைக்கப்படவேண்டும் அறிவியலில் முன்னேறி அதிசயங்கள் படைக்க வேண்டும் எமது வருங்கால சந்ததி அறிவியலில் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் தமிழர்கள் அறிவியலில் பெரும் வல்லுனர்கள் என்று அகிலம் பாராட்ட வேண்டும்.
ஆக்கம்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக