செவ்வாய், 8 ஏப்ரல், 2014

வந்த விருந்தினரை வரவேற்கப் பழகுவோம் . ஆக்கம் : ம. இரமேசு

November 24, 2011
தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
நாமக்கல் கவிஞர் பெருந்தகையின் வரிகளை வைத்து ஒரு பார்வை வரைபு- இன்று வருத்தம் யாதெனில் நல்ல தமிழர்கள் குறைந்து போதலே தமிழரின் விருந்தோம்பலுக்கு இணையாக வேறு யாரையும் முன்வைத்து பார்க்க முடியாது என்று பெயரெடுத்தவர்கள் தமிழர்கள் ,ஊரிலே வாழ்ந்த காலங்களில் நமக்கு பெரிதாக அறிமுகமில்லா வீடுகளுக்கு முக்கிய தேவைகள் நிமிர்த்தம் சென்றால் இருங்கோ தம்பி என்று முறுவல் செய்து முதலில் சுடச்சுட தேநீரையோ குழப்பியையோ தருவார்கள் அந்த வீட்டு தாய்மார்கள் பின்னர் விடயம் பேசப்படும்,அதுவே பகல்வேளை என்றால் உணவருந்தும்படி வற்புறுத்தும் நல்ல தமிழர்கள் வாழ்ந்தார்கள். இன்று அப்படிப்பட்ட தமிழர்கள் குறைந்து கொண்டு வருவது தமிழர்கள் குணத்துக்கு வந்து சேர்ந்த இழுக்காகும்.
ஒரு வீட்டில் ஒரு வேளை உண்டிருந்தால் அந்த உண்டி தந்தவரை உயிருள்ளவரை உறவாகவே கருதி வாழ்ந்த இனம்.இன்று யாரைப்பார்த்தாலும் வேலை வேலை பணம் காசு
காசு காசு என்று ஒரே ஓட்டம் பேராசையின் விளைவு ஓய்வின்றி நிம்மதியின்றி இயந்திர வாழ்வு , ஊரிலிருந்தபொழுது தந்தையர்கள் ஒரு தொழில் செய்தார்கள் ,போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று அறத்துடன் வாழ்ந்தார்கள்,பேராசைகள் இல்லாமல்,
வரும் வருமானத்தில் இனிமையாக மதிப்பு குறையாமல் வாழ்க்கை நடத்தவில்லையா வெளிநாட்டை நம்பியா பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்,சிந்தித்தால் வெளிச்சம் உருவாகும் உண்மையான வாழ்க்கை எதுவென்று புலப்படும்.
வீட்டுக்கு வருவோரை சிரித்து வரவேருங்கள் நீங்கள் விரும்பி கஷ்டப்பட்டு சமைத்து கொடுப்பதற்குதான் விருந்தோம்பல் என்று பொருளாகும் கடையில் வாங்கி கொடுப்பதோ விற்பவர்களிடம் விண்ணப்பித்து வாங்கி கொடுப்பதோ எந்நாளும் முறையான விருந்தோம்பலாகாது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தங்களை கேட்டுப்பார்க்கவேண்டும் எப்பொழுது யாரை எத்தனை காலத்துக்கு முன் கடைசியாக உபசரித்தோம் என்று.
வசதிகளும் பொருளாதாரமும் குறைந்து வாழ்ந்த காலங்களில் மனத்தாலும் மாண்பாலும் பண்பாலும் நிறைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள், இன்று பொருளாதார வசதிகள் அனைத்துமிருந்தும் குணத்தால் குன்றிப்போயிருக்கின்றது தமிழினம் வெளிநாடுகளில், சிரிப்பதற்கே சிலருக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது வாடிய முகம் திமிர்பிடித்த விழி நோக்கு என்னை விட யாரென்ற நடை நிம்மதியிழந்த கோலம் பணிவில்லா வாயசைவு ,நான் இப்படியான பெண்களை ஆண்களை கண்டு எனக்குள் நினைப்பது நீண்ட நேரம் தொலைக்காட்சி தொடர்களை பார்த்துவிட்டு அதில் காட்டப்பட்டதை நினைவுகளில் தாங்கிக்கொண்டு முகத்தை அலம்பாமல் சந்தைக்கு வந்த மந்தைகளில் ஒன்றாக வருகின்றனரோ என்று
என்ன செய்வது அவரவர் அறிவுக்கு ஒப்ப அவரவர்களின் வெளிப்பாடுகள் காலம் அன்றில் இக்கட்டுரை பாதை மாறுவோரை நேர்வழிக்கு திருப்பினால் அனைவருக்கும் நன்றாகும்.
அடுத்து ஒப்பனை பற்றி பார்த்தால் எங்கள் பிள்ளைகளை போற்றலாம் சில தமிழக பெண்களுடன் ஆண்களுடன் ஒப்பிட்டால் சென்றவார நீயா நானாவில் ஒருத்தி சொல்கின்றாள் உயிரைவிடவும் தயார் உதட்டு சாயத்தையும் ஒப்பனையையும் விடமுடியாது என்று ஆளைப்பார்த்தால் பெய்த மழையில் நனைந்துவந்த ஒற்றைவால் குருவிபோல் இருந்தாள், இன்னொருத்தி சபை என்றும் பாராமல் கணவனையே மதிப்பின்றி கதைக்கின்றாள்.
ஆங்கிலம் நன்றாக பேசுகின்றாள் ஆனால் தமிழ் நாகரிகம் தெரியவில்லை அவளுக்கு, எங்கள் மத்தியிலும் சிலதுகள் தலையில் தண்ணி தெளிக்க வேண்டி அதிபூச்சு அடிமையாகி திரிவதுண்டு ஆயினும் தன்மானமுள்ள தமிழன் ஒருவாறு புத்திசொல்லி திருத்தி வைத்துவிடுவான் ,எழில்பொங்கும் திருமுகத்தில் குங்குமம் சிரிக்க பண்புநடை போடும் தமிழிச்சியின் அழகுக்கு உலகில் ஈடும் இணையுமில்லை அவள் உதட்டுமேலே சிவப்பு சாயம் தீட்டமாட்டாள் நல்ல தமிழருக்கு
உரிய பண்பை மாற்றமாட்டாள் பல்லிளித்து சபைகளிலே மேடைகளிலே வாயாடமாட்டாள் தன் கருத்தைமட்டும் அடக்கத்துடன் அறிவிப்பாள் அவளுக்குண்டு
மரியாதை.
அகிதிலாருக்கு என்றும் உண்டு அவமரியாதையே,இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே.இஸ்லாம் சொல்லுகின்றது பிறர் கண்களுக்கு தெரியாமல் வாழ முனைபவளே உத்தமி பத்தினி என்று, மேடையில் ஏறி சாரியை(புடவை) காட்டும் நோக்கில் குனிந்தும் வளைந்தும் வெட்கம் அறவே இன்றி பல்லைகாட்டி சிரிச்சு பவிசு காட்டவென்றே தாங்களாகவே ஒரு சதத்துக்கும் உதவா நிகழ்வுகளை மேடையேற்றி கொள்(ல்) கின்றனர்
தமிழகத்து தமிழ் அழிப்பு தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்வுகளை
கண்ணுறும் நமது சிலர் அதனை பின்பற்றி தமிழர் பண்பாட்டை சிதைக்க கூடாது என்பது பண்பாளர்களின் விருப்பம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும் ,இல்லையேல் பின் வரும் தலைமுறை தவறான பாதைக்கு சென்றுவிடும் ,ஆதலினால் அன்புத்தமிழர்களே பேதங்கள் மறந்து நல்ல தமிழர்களாக
வருங்காலத்தில் இன்முகம் காட்டி இனிதே வாழ்வோம்.
ஆக்கம்
ம.இரமேசு
24 -11 -2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக