திங்கள், 1 டிசம்பர், 2014

அன்றைய கால மக்கள்  எந்தத் துறையில் இருந்தாலும் மிளிர்ந்தார்கள் காரணம் செய்யும் தொழிலில்  பயம் பக்தி  மரியாதை கொண்டிருந்தார்கள்.   இன்று கதை நன்றாக  இருந்தால் எந்த  ஆளும் நடிக்கலாம் படம்  வெற்றி பெறும் - இப்பொழுது  இருக்கும் நடிகர்களில் எவருக்கு முகபாவத்தை மாற்றி மாற்றி காட்டத்தெரியும்,   சிவாஜி  எம்ஜிஆர்  எம் ஆர் ராதா நாகேஷ்  நம்பியார் எஸ் வி சுப்பையா  பாலையா  முத்தையா   ரங்கராவ்  வீரப்பா அசோகன்  மனோகர்  ராமதாஸ்  போல் .  ஆனால் கோடிக்கணக்கில் 
சம்பளம்   வாங்கி பெரிய  பெரிய  வீடுகள் கட்டி  சொத்துக்கள் சேர்த்து  வைத்திருக்கின்றார்கள், இதில் முதல்வர்  ஆசை வேறு -  உலகநடப்பு,   உள்  வெளி  அரசியல் விவகாரம் , தமிழ்நாட்டு  கிராமங்களின் நிலை,  மனிதர்களின்  வாழ்வுநிலை,  நதிகள், குளங்கள்  பற்றிய  கணக்கு புள்ளிவிபரங்கள்  என்ன என்று தெரியுமா ,  பதவிக்கு வந்தால் அவற்றைப் பற்றி  அறிய ஆளை வைப்பார்கள்  அவ்வளவே -  ஐயா டி எம் எஸ்  மரணச் சடங்கில் சிவாஜி  பிள்ளைகள் ஊரில் இருந்தும்  கலந்து கொள்ளவில்லை.  இது  சிவாஜி குடும்பத்துக்கே இழுக்கு.   நன்றி மறந்த செயல்,  சிவாஜியின்  பாடல் நடிப்புக்கு குரலால்  உயிர்கொடுத்த  ஒப்பாரும்  மிக்காருமில்லா பாடகனுக்கு அவர்கள்   செலுத்திய  நன்றிக்கடன்  இதுதான்.

  தமிழ் நாட்டின் கலைத்துறையில் சிவாஜி எம் ஜி ஆருக்கு  ஈடு இணையான கலைஞன்  பாடகர் திலகம் டி எம் எஸ் . நடிகர்களுக்கு மட்டுமின்றி  இரசிகர்களுக்கும்  பாலமாக  இருந்து பாடிக்கொடுத்தவர்  டி எம் எஸ்  ஐயா என்றால் மிகையில்லை.    கச்சேரிகள் ஈட்டிய பொருளை    ஏழை மக்களுக்கு கொடுத்து உதவிய மாமனிதர். அவர் கோடிகளை  கொண்ட  கலைஞனாக  இல்லாததனால்  எல்லோரும் மறந்துவிட்டார்கள், அந்த மகா  மனிதனை கலைஞனை  என்பது தமிழ் நாட்டுக்கே வெட்ககேடு, இழுக்கு. அவர் மட்டும் வேறு நாட்டிலோ பக்கத்து மாநிலங்களிலோ  பிறந்திருந்து   பாடியிருந்தால்  அவரை  மிகவும் போற்றிக்  கொண்டாடியிருப்பார்கள்.  தமிழ் நாட்டில்  விளம்பரம் செய்பவர்களுக்கும்,  இனிப்பாய் பேசி  நாடகமாடுபவர்களுக்குமே  காலம். அவர்மட்டும் கோடீஸ்வரனாக  இருந்து நயமாக  நடித்துப்பேசியிருந்தால்  எல்லோரும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு  சென்றிருப்பார்கள், தங்கத்தேரில் வைத்து  இழுத்திருப்பார்கள். குறிப்பாக  ஒருவர்  சொல்லுவார்  பெரிய கலைஞர்களைப் பார்த்து "அவரின் பிள்ளை நான்" என்று.  எங்கே தொலைந்தார் அந்த ஆள்,  மரணச் சடங்குக்கே சமுகமளியாது?  ஒரு  மாபெரும்  தமிழ்நாட்டின்  குரல் வித்தகன் 50 ஆண்டுக்கும் மேலாக   பாடி  மக்களை மகிழ்வித்தவர் மரணித்தார் ,  அதற்கு  அஞ்சலி  அன்றில் இரங்கல்  தெரிவிக்கக்கூட   எண்ணாது தாமும் கலைஞர்கள்  என்ற பெயரில்  வாழ்கின்றார்கள் தமிழ் நாட்டில்.  இந்த  அலட்சியத்தை கண்டிக்க எந்தப்  பத்திரிகையும் இல்லை தமிழ்நாட்டில்  என்பது மாபெரும்  வேதனை.

டி எம் எஸ்,  பக்தன்
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக