ஞாயிறு, 30 நவம்பர், 2014

இதனால்  ஒன்று

"அச்சமே கீழ்களது  ஆசாரம் : எச்சம்
அவாவுண்டேல்   உண்டாம்  சிறிது "


ஐரோப்பியர்கள் என்றால் மது அருந்துபவர்கள்  மாமிசப்பிரியர்கள்   நிறைய பெண்களுடன் ஆண்களுடன் உறவாடுபவர்கள்  என்றே  நாம் நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றோம்  அதில் முழு உண்மையில்லை -  இங்கும்  ஒழுக்கத்துடன் நல்வழியில் வாழும் வெள்ளைக்கார  மக்கள் நிறைய  இருக்கின்றார்கள்   முழங்காலுக்கு  கீழே பாவாடை அணியும்  வழக்கமுமுண்டு  மது மாமிசம் உண்ணாதவர்களும்  இருக்கின்றார்கள் பிறருக்கு உதவி செய்யும் மேலானான  நல்ல இதயமுள்ளவர்களும் வாழ்கின்றார்கள்.  நம்மவர்கள் தீயதை மட்டும் எடுத்துக்கொண்டு  வெள்ளை மக்களின் நல்ல பக்கங்களை காணாது விட்டிருக்கின்றார்கள். ஔவையையும் வள்ளுவனையும்   வள்ளலாரையும்  தேவாரங்களையும் திருவாசகங்களையும் படித்துவிட்டு  பட்டும் பவளமும்  தரித்து  வன்னிவாழ்  தன்  இனத்துக்கு  தருமம் செய்யா மனமுடைய  தரித்திரர்கள்  நம்மிடையே நிறைந்து வாழ்கின்றார்கள் - தமிழ் என்பார் அதை காதலிக்கின்றேன் என்பார்  ஆனால்  தமிழ் கூறும்  அன்பு கருணைஇரக்கம் மட்டும் கைக்கொள்ளார். உதவிச்சேவை  செய்பவர்களுக்கு  ஆதரவும் கொடார் பொய்யான  சாட்டுகள் சொல்லி ஓடி ஒளிவர். மேடைகள்  பாராட்டுக்கள்   என்றால்   ஈ  இலையான் எறும்பு போல் மொய்ப்பார்கள்  அழகாகச்   சிரிப்பார்கள்  அறிவு சீவிகள்போல்  அளப்பார்கள் . பட்டப்பகல்  பட்டாடை  உடுத்தும்   இருட்டு மாந்தர்,   இவர்கள்தம்  இதயத்தில்  இல்லை  இரக்கம் .
"அச்சமே கீழ்களது  ஆசாரம் : எச்சம்
அவாவுண்டேல்   உண்டாம்  சிறிது "

ம - இரமேசு  - தொன்மார்க்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக