ஞாயிறு, 23 நவம்பர், 2014

உங்களிடம்  இல்லாதவருக்கு கொடுக்க பொருள் இல்லை என்று  கவலை கொள்ளாதீர்கள்  உண்மையில்  உதவி செய்ய வேண்டும் என்ற  தூய மனம்  உங்களிடம் இருந்தால் போதும்  நீங்கள்  உதவி செய்தது
போலாகவே  அமையும். ஏனெனில் உங்களிடம் பொருள் இருந்தால் நிச்சயம்  கொடுத்து உதவி செய்வீர்கள் .

மலையை  பாருங்கள்  அதன் உயரத்தை நோக்குங்கள்  அங்கிருந்து  உருவாகும்  நதியினை  அதன்
தன்மையை   சிந்தியுங்கள்  உயர்ந்த இடத்தில் பிறந்தும்  பள்ளம் நோக்கி கீழே  இருப்பவர்கள்
பயன் பெறவேண்டும்  என்ற  எண்ணத்தில்  கீழ்நோக்கி  வருகின்றது நதி  அதன்  சேவையால்  மக்கள்
மகிழ்கின்றார்கள்  தாகம் தீர்ந்து  அமைதி கொள்கின்றார்கள் . இதுபோல்  உயர்ந்த தரத்தில் இருப்போர்
தம்மிலும் கீழே  இருக்கும் அல்லல் கொள்ளும் மக்களுக்கு  உதவி செய்ய  வறியவர்களை  நாடி 
கீழே  செல்ல வேண்டும்   அவர்களுக்கு  மருந்தாக  உங்கள்  உள்ளம் இருக்க வேண்டும் . அப்படி
தேடிச்சென்று  உதவுங்காலே  நீங்கள்  நல்லறிவுகொண்ட   மேன்மக்கள்  என்று பொருட்படும்
நமக்கேன் வம்பு  என்றெண்ணி   ஒதுங்கினால் கற்ற கல்விக்கு சேற்றை  பூசுவது போலாகும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்  இங்கே இருக்கப்போவது  கொஞ்ச நாட்கள்  அதில்
நன்மைகள் செய்தோம்  உதவினோம் என்று வாழ்ந்து முடித்தலே  நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாகும்
பிறருக்காக  நெஞ்சை திறந்து வாழ்ந்தாலே  நாம்  உலகைவிட்டு நீங்கிய பின்னும்  நமது பெயர் அழியாது காலம் காலமாக  நிலைக்கும் என்ற உண்மையை  உணர்தல் வேண்டும்
இந்த உலகில்  நிறைய பணக்காரர்கள் தோன்றி மறைந்தார்கள்  அவர்கள் பெயர்கள்  எவருக்கும்
உடனே  ஞாபகம்  வருவதில்லை   ஆனால்  பிறருக்கு  நன்மை செய்து  எல்லோரையும் தன்னைப்போல்
தன்குடும்பத்தைப்போல்  எண்ணி  வாழ்வில்  செயற்பட்டவர்களே  இன்றும்  மக்கள் மனதில்
நிலைத்திருக்கின்றார்கள்    ஆதலினால்  நம் நாட்டில் இன்னற் பட்டுக்கொண்டிருக்கும் எளியவர்களை
அணுகி  அவர்களுக்கு நீங்களும்  உங்கள் நண்பர்களுமாக  இணைந்து  உதவி செய்ய  இன்றே எழுங்கள்
பெரிய தொகைகள் அனுப்பினால் தான்  மதிப்பு என்று எண்ணாதீர்கள்  பத்துப்பேர் சேர்ந்து  பத்து ஈரோ  போட்டு  அதை நூறாக்கி அனுப்புங்கள்  அங்கிருக்கும்  ஒரு ஏழைக்குடும்பம்  ஒருமாதம்
பசியாறும் - அங்கே 63 ரூபா  ஒரு இறாத்தல்  பாண்  என்பதை  அறியுங்கள் .

தற்சமயம் அங்கே  சரியான  மழை  குழந்தைகள் தாய்மார்கள்  என்று சகல  ஏழை மக்களுக்கும்  வயற்றில் பசி,  கூரைகள்  நன்றாக இல்லை  அவர்கள் எப்படி நிம்மதியுடன் உறங்குவார்கள் -  எனது சக  இனத்தவன் துடிக்கும் போது  நான்  பல லட்சம்  செலவு செய்து  ஆடம்பர விழா  நடத்துவது  அறிவுடமையாகுமா  என  சிந்தியுங்கள்   அப்படியே  விழா நடத்துவது இன்றியமையாதது எனுமிடத்து  அங்கு துடிப்போருக்கு உதவி செய்துவிட்டு  ஆடம்பரம் இல்லாது  அளவுடன்  அடக்கமாக விழாவை நடத்துங்கள் கொண்டாடுங்கள்  அதுவே நல்லறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக