வியாழன், 13 நவம்பர், 2014

உங்களுக்கு ஒரு இன்பமோ துன்பமோ  ஏற்படுகின்றது என்றால்  அது நீங்கள் செய்த செயலாலேயே  உண்டாகின்றது  அதற்கு வேறு எவரும் பொறுப்பல்ல  விடுத்து கடவுள் என்னை  கைவிட்டு விட்டார்
என்பது  அறிவீனம்  கடவுள் எவருக்கும் தீமை செய்யமாட்டார்  என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்  தீமை செய்பவராயின் அவர் கடவுள் இல்லை  நாம் தவறு செய்தாலும் அதை மன்னித்து அருள்பவரே கடவுளாக விளங்க முடியும்  மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம்  மாணிக்கக்  கோயில் போன்றது அதில் வஞ்சகம்  சூது இருக்காது   அன்பும் கருணையும் இரக்கமும்  நிறைந்திருக்கும்  உள்ளம் எவர்க்கெல்லாம் இருக்கின்றதோ அவர்களிலே  தெய்வம் இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக