புதன், 12 நவம்பர், 2014

மரணபயங் காட்டி  மக்களை  சீர்திருத்த முயல்வது அறிவீனம்  அது நல்ல விளைவுகளை எட்டித்தராது
மக்கள்  சிந்திப்பதனால்  மட்டுமே நல்ல முன்னேற்றம் வரும் அதற்கு மக்களை சிந்திக்க வைக்க செய்தல்  வேண்டும் -  அன்பாக  பணிவாக  பொறுமையுடன்  சொன்னால் எந்த மிருகமும் பணியும் கேட்கும் அடங்கும்  என்பது மெய் .  உப்பை பொதிசெய்து கொண்டுபோய் பசிக்கு உண்ண முடியாது
விட்ட பிழையை மீண்டும் விடக்கூடாது என்று சிந்திக்கும் போது  மனிதன் தூய்மையின்  ஏற்றம் நோக்கி விரைகின்றான்   ஆணவத்தில் பெரியது கல்வியால் வருவதே  அது வந்தவிட்டால்   கல்வியாளன் என்ற  தரத்திலிருந்து எவ்வளவு கற்றவனும்  அடிசறுக்கி விழுகின்றான் பண்பை இழக்கின்றான் - கல்வியாளன்  செல்வந்தன் என்போரது கடமை  தம்மில் நலிவுற்றோரை முன்னிலைக்கு  உந்தித்தள்ளி விடுதலே .
அறிவின் கண்கள் விழிக்கும்போது  அறம்  கைக்கொள்ளல் வேண்டும்   அறத்தை மறந்ததால் ஏற்பட்டதே கீரோ  சீமா  அழிவுகள்   கொடூர மனித சாய்ப்புக்கு அறிவு பயன்பட்டு  ஏது பெருமை 
நேரம் கிடைக்கும் போது மனிதன் தான் விட்ட  பிழைகளை  சிந்தித்து  நல்ல பக்கத்தில்  யோசிக்க வேண்டும்  கோபத்தை அடக்க  அடக்க  மனிதன்  குணம் என்ற குன்றில் ஏறுகின்றான்  எல்லோராலும் மதிக்கப்படும் நிலைக்கு உயர்கின்றான்.

ம.இரமேசு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக