புதன், 12 நவம்பர், 2014

கதிரவன்  சென்றதால்
களையிழந்து வாடி
கைகாட்ட முடியாது
மண்ணில் விழும்
மஞ்சல்  இலையே
நீ வடித்த கண்ணீரெல்லாம்
குளிராகி எம்மை  தாக்குதே
சுந்தரிபோல் நின்றாய்
மாலையில்  மயக்கினாய்
வெக்கையில் அரவணைத்தாய்
இன்றோ  காற்றின் கனம் இறுக
கோடை  பாடையேற
குளிர்வந்து கொல்லுதே   கொல்லுதே 

சுந்தரக்கனவுகளில்  சொர்க்கம்சென்றே
அந்தர அர்ச்சனைகளில் மனம்  அமைதிகண்டே
அவசர வாழ்வில்  அவாக்களுடன் வாழ்ந்து
அவசர  அவசரமாகத்   தொலைகின்றோம் 
அல்லலும்  கொஞ்சமல்ல ஆதரவும்  யாருமில்லை
நெஞ்சம்  அடக்கி  காசில் நேசங் கொண்டே
நிலையாத  வாழ்வில்  நெஞ்சின் இனிமைக்கு
ஒரு நிமிடந்தன்னும் வாழாது  தொலைகின்றோம் 

கஞ்சல்  என்று பட்டம்  எடுத்து  காசைத்தொழுது
கருணையின்றி பொய்பேசி  கனவான் வாழ்வு
அது  களங்கம்  சுமந்த  வண்டில்  வாழ்வு
ஒரு நாளும் ஒரு பொழுதும் நெஞ்சம்  திறப்பதில்லை
நீசன்   நெருப்பு  நெஞ்சங்  கறுத்தான்  என்று
நல்லவர்கள்  நினைத்திடவே  பகட்டு வாழ்வு
பணம் பணம்  அதுமட்டுமே  குறி பொறி
குணமுமில்லா  மணமுமில்லா  குப்பை நாற்றம்
இந்த  வாழ்வுக்கு  பிறக்காது இருந்திருந்தால்  நன்று

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக