திங்கள், 3 நவம்பர், 2014

நல்ல  விழிப்பு  - மாற்றாரைப்பார்த்து அப்படி வாழ  ஆசைப்படுவதால்த்தான்  நொந்துபோகின்றோம்  -    நான் நானாக  எனது இயல்பின் படி வாழ  வேண்டும்  அங்ஙனம்  வாழ்கையில்  மற்றவர்போல் பணத்துக்கு முக்கியம் கொடாது குணத்துக்கு முக்கியம் கொடுப்பதனால்  பணக்காரர்களின்  பார்வையில் அந்நியப்படுகின்றேன் , மற்றவர்களைப்  பார்த்து  தனது இயல்பைப்  புறந்தள்ளி  மற்றவர்கள்போல்  வாழ்வது  இதுவே இன்று  எங்கும் நடக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்க்கையோட்டம்  எவரும் இயல்பாக  வாழ்வதில்லை  எல்லோர்  குறியும் அதிக  பணம்
சேர்த்து ஆடம்பரமாக  வாழ்வதே   இதில்   ஒரு சிலர் மட்டும்  தூர நிற்கின்றார்கள்  விதிவிலக்கு என்றுங்  கொள்ளலாம்  தமக்கான  உணர்வின் உண்மையின் ஊரை  நோக்கிப் பயணஞ் செய்கின்றார்கள்

பொதுவாக  எனது தமிழன்  எதை நோக்குகின்றான்  பல ஆண்டுகள் ஐரோப்பிய மண்ணில் வாழ்ந்தால்
ஒரு தமிழனிடம்  வீடு கார்  பெருந்தொகைப்பணம்  இருக்க வேண்டும் என்றே  நோக்குகின்றான்
அதை  மட்டும் கருத்திற்  கொண்டே  நட்புக் கொள்கின்றான்  அப்படி  பொருள் கருதி  சிநேகிக்கும்
சிநேகம்  உண்மையான்   சிநேகம்  ஆகாது  - தானும் வாழ்ந்து பிறருக்கும் உதவி  வாழும் இரசனையுடைய  மனிதர்களால்  பெரும் பொருள் சேர்த்துக்  குவிக்க முடிவதில்லை
அவர்கள்  எதிர்காலக்  கவலை அற்று நிகழ் காலத்தை  மட்டும்  இன்பமாக்குபவர்கள் 
இங்கே  பலவாண்டுகள்  வாழும் என் தமிழர்கள் பெரும்பான்மையானோர்  தமது இனிய வசந்த
வாழ்வை  தொலைத்தே  இன்று  அதிக பொருட் செல்வம்  சேர்த்து வைத்திருக்கின்றார்கள்  அவர்கள்
இங்கு இளமையின்  இரசனையில் ஆசைப்பட்டதை  அனுபவித்து  வாழ்ந்ததில்லை  என்பது மட்டும் கண்கூடு .

"கொடுப்பதுவும் துய்ப்பதுவும் இல்லார்க்கு  அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் "  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக