ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் மாற்றுக்கருத்து இல்லை எவருக்கும் இருக்கவும் முடியாது
ஆனால் அன்று பாடசாலையில் கல்வி கற்றபோது சில ஆசிரியர்களை சர்வாதிகாரிகளாகவே காண
முடிந்தது அவர்களிடம் அன்பு என்ற பூவை முகமலர்வுடன் காண்பது அருமையாகவே இருந்தது அவர்கள் சிரித்துப் பேசியதைக் கண்டதில்லை கையிலே கோலை வைத்துக் கொண்டே அங்கும் இங்கும் வகுப்பு மாறுகையில் நடந்தார்கள் - வளர்ந்தவர்களாக இருந்தும் அவர்கள்
தங்கள் நடத்தை பற்றி சிந்திக்காதே வாழ்ந்திருந்தார்கள் - வெள்ளைக்காரன் தனது அதிகாரத்தைக்காட்ட
தடிகொண்டு மக்களை அடிமைகளாக பாவித்து தனது மேலாதிக்கத்தைக் காட்டினான் பணியாதவர்களை கொடுமைப்படுத்தி சாகடித்தான் அதிகாரத்தை காட்டும் ஆணவ அடக்குமுறையின் சின்னமே பிரம்பு அதை கையில் வைத்திருப்பவர்களிடம் அன்பை காண்பது
குதிரைக்கொம்பே , கரும்பலகை மீது எழுதினார்கள் தங்கள் பாட்டுக்கு உரை நிகழ்த்தினார்கள்
மணியடிக்க அதிகாரத் தோரணையுடன் மிடுக்காக அடுத்த வகுப்புக்கு நடந்தார்கள் படிப்பித்தது
யாருக்காவது புரிந்ததா என்று வினவியதுமில்லை அன்பாக கனிவாக நடந்துகொண்டதுமில்லை
வீதியில் அவர்கள் நடந்தோ சைக்கிலிலோ வந்தால் அவர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்குதல் அதற்கு மரியாதை என்று அர்த்தம் சொல்லல் என்று மாணவப் பராயத்து வாழ்வு நகர்ந்தது அதை இன்று நினைக்க அருவருப்பாக இருக்கின்றது தன்மானம் பின்னே எப்படி வரும் - இங்கு பாடசாலையில் சில காலம் பணியாற்றும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன்பு கிட்டியது அப்பொழுது இங்கு எப்படி ஆசிரியர்கள் மாணவர்கள் தொடர்பாடல் இருக்கின்றது என்பதை நோக்கினேன் அதிசயித்தேன் ஆசிரியரின் பெயரை உரக்கச்சொல்லி மாணவர்கள் அழைக்கின்றார்கள் ஆசிரியர்கள் புன்னகையுடன் என்ன என்று கேட்கின்றார்கள் கனிவாக மாணவர்களுடன் உரையாடுகின்றார்கள் இங்கு எந்த ஆசிரியரும் தகப்பன் என்ன தொழில் செய்கின்றான் என்று அறிந்துவிட்டு மாணவர்களை மட்டமாக நடத்துவதில்லை, வீதியில் ஆசிரியரைக்கண்டு பயந்து ஒதுங்கும் மாணவர்களை ஐரோப்பாவில் காண முடியாது மாறாக ஆசிரியரைக் கண்டால் கிட்ட சென்று மகிழ்வாக உரையாடும் மாணவர்களே இங்கு. எவரும் எவருக்கும் பயப்படுவதில்லை தன்மானத்தை மறந்து பணிவதுமில்லை காலில் விழுவது கும்பிடுவது என்ற கோணங்கி வேலைகளை கண்டதில்லை நாங்கள் கலாச்சாரம் பண்பாடு என்ற போர்வைக்குள் தன்மானத்தை தொலைக்கின்றோம் - உண்மையாக உள்ளத்தால் மகிழ்ந்து ஒரு பெரிய மனிதருக்கு காலில் விழுந்து பணிவது வேறு விடயம் அது அவரின் மீதான பற்றை வெளிக்காட்ட செய்யும் முறை அதற்காக உள்ளத்தில் பற்றின்றி வீணே விழுந்து எழும்புவது எதற்கு, மற்றவர் எனது காலில் விழுந்து பணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் இழிவான எதிர்பார்ப்பு
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக