காற்றினில் கரைந்த காலங்கள்
நீண்ட வானாய் நினைவில் நீளுதே
நெஞ்சம் சிலருக்கு மட்டும்
பழைய நினைவில் துஞ்சுகிறதே
வஞ்சமில்லா அந்த வாழ்வில்
வந்து போன மனிதர்கள்
வட்டங்கட்டிக் கூடி இருந்து
வகை வகையாய் பேசி மகிழ்ந்த
வடிவான நண்பர்கள் எங்கே
பட்டந் தெளித்தான்
என்று பகைத்து
கட்டிப்பிடித்து அடிபட்டு
பந்தடியில் ஒன்று கூடி
பின் இணைந்த சிநேகிதர்கள் எங்கே
செக்கல் மீன் வாங்கி வந்து
சித்தப்பா சித்தி கையில் கொடுத்திடவே
பச்சையரிசி சோற்றுடன்
பால்ச்சொதி வைத்து முடிக்க
பாசத்துடன் வந்தே சித்தப்பா
நித்திரைப்பாயிலெனை
தட்டியெழுப்பி
முகங் கழுவித்தே
முதற் கவளம் சீத்திவிட
சுவை பிடிபட்டு சொந்தக்கையால்
சுடு சொதிக்குள் கைவைத்து
ஆ ஊ என்று சுடச்சுட அள்ளிச்
சுவைத்து மகிழ்ந்த காலம்
நினைவில் குழைகின்றதே
இங்குநானும் செக்கல் செக்கலாய்
எங்கெல்லாமோ ஏறி இறங்கி
என்னவெல்லாமோ சுவைத்து விட்டேன்
அந்த ஆறுரூபா மீனில் பால்ச் சொதி தந்த
சுவைக்கு மேலாக மேதினியில்
சுவையில்லையென்பேன்
சங்கானைச் சாந்தியிலே
பாட்டும் பரதமும் பார்க்க
பாசத்துடன் கூட்டிச் சென்று
இனித்திடவே சோடா வாங்கித்தந்து
படம் முடிந்து வீடு நடக்க
சிவாஜி நடிப்பை புகழ்ந்துகொண்டே
சித்தப்பா வீறுநடை
போட்டதை பொன்னாக
நினைவில் வைத்தேன்
போகிற போக்கில்
பொக்கிச நினைவுகளை
மறக்க முடியவில்லையே
ம.இரமேசு .
நீண்ட வானாய் நினைவில் நீளுதே
நெஞ்சம் சிலருக்கு மட்டும்
பழைய நினைவில் துஞ்சுகிறதே
வஞ்சமில்லா அந்த வாழ்வில்
வந்து போன மனிதர்கள்
வட்டங்கட்டிக் கூடி இருந்து
வகை வகையாய் பேசி மகிழ்ந்த
வடிவான நண்பர்கள் எங்கே
பட்டந் தெளித்தான்
என்று பகைத்து
கட்டிப்பிடித்து அடிபட்டு
பந்தடியில் ஒன்று கூடி
பின் இணைந்த சிநேகிதர்கள் எங்கே
செக்கல் மீன் வாங்கி வந்து
சித்தப்பா சித்தி கையில் கொடுத்திடவே
பச்சையரிசி சோற்றுடன்
பால்ச்சொதி வைத்து முடிக்க
பாசத்துடன் வந்தே சித்தப்பா
நித்திரைப்பாயிலெனை
தட்டியெழுப்பி
முகங் கழுவித்தே
முதற் கவளம் சீத்திவிட
சுவை பிடிபட்டு சொந்தக்கையால்
சுடு சொதிக்குள் கைவைத்து
ஆ ஊ என்று சுடச்சுட அள்ளிச்
சுவைத்து மகிழ்ந்த காலம்
நினைவில் குழைகின்றதே
இங்குநானும் செக்கல் செக்கலாய்
எங்கெல்லாமோ ஏறி இறங்கி
என்னவெல்லாமோ சுவைத்து விட்டேன்
அந்த ஆறுரூபா மீனில் பால்ச் சொதி தந்த
சுவைக்கு மேலாக மேதினியில்
சுவையில்லையென்பேன்
சங்கானைச் சாந்தியிலே
பாட்டும் பரதமும் பார்க்க
பாசத்துடன் கூட்டிச் சென்று
இனித்திடவே சோடா வாங்கித்தந்து
படம் முடிந்து வீடு நடக்க
சிவாஜி நடிப்பை புகழ்ந்துகொண்டே
சித்தப்பா வீறுநடை
போட்டதை பொன்னாக
நினைவில் வைத்தேன்
போகிற போக்கில்
பொக்கிச நினைவுகளை
மறக்க முடியவில்லையே
ம.இரமேசு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக