வெள்ளி, 21 நவம்பர், 2014

உறைக்க  சொல்லும்  உண்மைக்கருத்து 
இதை அறிவாய்  தெளிவாய்  தமிழா.

" கொடுத்தலும்  துய்த்தலும் தேற்றா  இடுக்குடை
 உள்ளத்தான்  பெற்ற பெரும் செல்வம் ,- இல்லத்து
உருவுடைக் கன்னியரைப்போலப் ,  பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்  படும் "

பொருள்

தானும்  அனுபவியாது  பிறருக்கும் கொடுத்து உதவாது
ஒருவர்  சேர்க்கும் பெரும்  செல்வமானது  வீட்டில்
வளர்க்கும்  அழகிய இளம் பெண்ணை  மாற்றான்
அனுபவித்தலுக்கு சமம் ( வீட்டுப் பெண்ணை  அவ்வீட்டின் ஆண்கள்
அனுபவிப்பதில்லை  திருமணம்  செய்து வைக்கும்  இரத்த  சம்பந்தம்
இல்லா ஆளே  அனுபவிப்பான் ) அதாவது  என்றோ ஒருநாள்
அச்செல்வம்  வேறு ஒருவரால்  அனுபவிக்கப்படும்  .

குறிப்பு
அறஞ் செயாதான் செல்வம் அழியும்
ஆன்மீக  மனமுடையோராய்  அழகாக
பலர்  தோன்றுகின்றார்கள்  இனிக்க இனிக்க
பேசுகின்றார்கள்  தேவாரம்   பாடுகின்றார்கள்
பிள்ளைகளுக்கும்  சொல்லிக்கொடுக்கின்றார்கள்
நிறைவான செல்வம் கொண்டிருக்கின்றார்கள்
வன்னியில் வாடுவோருக்கு  100  குரோண்   10 ஈரோ 
தாருங்கள் என்றால்  பதில் இல்லை,   இப்படியானவர்களுக்கே
மேடைகளில்  பாராட்டுக்கள்  பொன்னாடைகள்  இன்னும்
நமது சமூகம்  எங்கோ  நிற்கின்றது . இந்த உண்மைகளை
சொன்னால் பொறாமையில்  கதைக்கிறான் விசரன் 
என்ற  அரும்பெரும்  சொற்கணை  பொழியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக