சிந்தித்த முதல் நாள்
அறுபதில் கிளியோடு பேசு கிளி கிடைக்காத நாட்டில் வாழ்கின்றீர்களா அல்லது கிளியை வளர்ப்பது தவறு என்று நினைக்கின்றீர்களா எனது அமரரான அப்பாபோல் , அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியுடன் பேசுங்கள் ஏனெனில் அறுபதுக்குப்பிறகு எளிதில் உங்களுடன் கதைப்பதற்கு யாரும் வரமாட்டார்கள் கண்ணாடி பேசாது ஆனால் பேசுவது போன்ற உணர்வைத்தரும் - சிறுவயதில் கிளி வளர்க்க ஆசைப்பட்டதனால் எனது மாமா ஒருவர் ஆறு பற்றி (மின்கலம்) டோச்லைட் ( கைப்பிடி ஒளிவிளக்கு ) அடித்து ஒரு கிளிக் குஞ்சை என்னிடம் கொண்டுவந்து தந்தார் அதைக்கண்டு நான் அடைந்த பரவசம் மகிழ்ச்சி எல்லையில்லை - கிளிக்கூண்டு வேண்டித்தருமாறு கெஞ்சியதைக்கண்டு 3 ரூபாவுக்கு பெரிய கிளிக்கூண்டு வாங்கித்தந்தார்கள் எனது தாயார் சில நாட்கள் அந்தக்கிளியுடனே எனது வாழ்வு ஓடியது நான் சாப்பிட மறந்தாலும் அதற்கு எள்ளு , கொவ்வைப்பழம் எல்லாம் வைத்துவிடுவேன் எங்கள் வீட்டு நாய் கிளியை பார்த்து குலைக்கும் விதமும் பார்வையும் எனக்கு பிடிப்பதில்லை . இப்படியிருக்கையில் ஒரு நாள் எனது தந்தையார் கொழும்பிலிருந்து லீவில் (விடுமுறை) வந்திருந்தார் இரண்டு நாட்கள் எனது கிளியுடனான நட்பைக் கண்டார் மூன்றாம் நாள் என்னை நெருங்கி அன்பாக சாதாரணமாகக் கேட்டார் மகனே இதுபோல் உன்னை ஒரு கூட்டில் அடைத்தால் நீ மகிழ்வாயா என்று, அன்றைய பொழுதே நான் சிந்தித்த முதல் நாள் அடுத்த கணமே கூட்டைத் திறந்தேன் கிளி சுதந்திரமாக வெளியே பறந்தது .
ம.இரமேசு
தொன்மார்க் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக