செவ்வாய், 18 நவம்பர், 2014

சோறாலும்  கறியாலும்  கட்டிய சுவர் தேகம்
ஊராலும் உறவாலும்  கண்டு வளர்ந்த தேகம்
பொல்லாப் பகை வீழ்த்தப்  போராடிய தேகம்
மழையோடும் வெயிலோடும் பொறுத்த தேகம்
மலரோடும்  மங்கையோடும்  முகர்ந்த தேகம்
உயிரோடும் உணர்வோடும்  உறவாடும் தேகம்
மானங்காக்க  மாடாய் உழைக்கும் தேகம்
முதுமையில்  பெரு வலிகாணும் தேகம்
நெருப்பு நீரால் உருவு பெற்ற தேகம்
மண்ணோடு மண்ணாக  சாம்பலாகும் தேகம்
இதற்குத்தான்  எத்தனை  எத்தனை  பூச்சு
வாசனைத் திரவியங்கள்  வண்ண  வண்ண ஆடைகள்
வசதியான இருப்பிடம்  மகிழுந்து
எல்லாம் முடிந்து  இறுதியில்   பிணம் பிணம்
என்ற பெயரே மிஞ்சும்  இதை  அறிந்தும்
அறிவின் கண் திறவாது  அவாக்களுடன்
அலைகின்றதே  மனிதக்கூட்டம்
முடிவை அறிந்தவன் எந்நிலையிலும்
அமைதியாக இன்பமாக  இருக்கின்றான்
எதையும்  பெரிதாக  எதிர்பார்ப்பதுவுமில்லை
எண்ணுவதுமில்லை  உள்ளத்தில் நிம்மதி நிம்மதி

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக