அலைவரும் திசை நோக்கி துணைவரும் தோணியிலென்று
அங்கையற்கன்னி காத்திருக்க சிலைவரும் முகிலென
தலை காட்டி அத்தான் தண்டு வலிக்கக் கண்டே
மழைகண்ட மயிலாக முகம் மிளிருங் கணம்
இனி யுகம் என் பொழுதே என மகிழும் கோதையின்
மகிழ்வில் வான் புயல் வழிந்தோடும்
கன மழையுங் காற்றுங் குளிரும் அவன் தேகம் சுமக்கும்
நிலமதில் மானத்துடன் வாழும் மனத்துடன் அவன்
நிலம் பறி நீசர் வாழ்வுபோல் ஏமாற்றிடும் வாழ்வில்லை
நெய்தல் அன்னை அரவணைப்பில் நிதம் ஒரு போர்
வலைகள் அள்ளும் பொன் வானுயரும் தன்மானம்
வாட்டமில்லா வாழ்வு வஞ்சமில்லா நெஞ்சு
கஞ்சன் இவன் என்று சொல்ல யாருமில்லை
அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம் அங்கே
பஞ்சம் என்று கண்டறியார் பொங்கிப் படையலிடுவார்
ஒன்றார்க்கும் உதவிடுவார் ஒன்றென்றால் ஓடிவருவார்
நிலவினில் கூடிடுவார் நிலாச்சோறு உண்டுமகிழ்வார்
நல்லுரைகள் நாளும் நாவில் நயமாய் நவின்றிடுவார்
நல்லவர்க்கெல்லாம் தோழரவர் நரிகளுக்கு எமனாவார்
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக