செவ்வாய், 4 நவம்பர், 2014

a

ஏடென்பார்  எழுத்தென்பார்
 சாமியென்பார்   பூசை என்பார்
 சரித்திரத்தில் சான்று பகிர்வார்
சாதனைகள் சொல்லி மகிழ்வார்
 ஏழைக்கு நிதிகேட்டால்
 எள்ளி நகைத்திடுவார்
போ போ  என்றே
நெஞ்சு பொசுங்கும் சொல் வீசி
  விரட்டியடித்திடுவார்

மண்ணோடு  மறைந்துவிட்டால்
அந்தியெட்டிக் கல்வெட்டில்
அழகான  படம் போட்டு 
ஊருக்கு  உழைத்த உத்தமர்
ஏழைகள்  நேசன்
வாரிக்கொடுத்த  வள்ளல்
மனிதகுல மாணிக்கம் என்றே
 வரிக்குவரி வாழ்த்திடுவர் 

இதுதான்  நாம் வாழும்  உலகம்
தமிழின்  அன்னைபெற்ற 
தமிழ்க் குலத்தின் பிள்ளைகள்
தயை  இழந்து  தன்மானமிழந்து
காசுக்காய்  இரக்கங் கொன்று
வெறும் பேருக்காய்
மரத்தினைப்போல் 
வாழ்கின்றாரிங்கே

ம.இரமேசு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக