ஜெர்மனிலிருந்து பிரான்சுக்கு சென்ற தொலைபேசி----""""" -----
அத்தான்!! பிள்ளையளை நாலு இடங்களுக்குப்போய் பார்த்துவர விடுங்கோவன் அவங்கள் வளந்த பெடியள்தானே உப்பிடியே வீட்டுக்குள்ளையே வைச்சு சோத்தையும் கறியையும் போட்டு வளத்தா போதுமே , உலக அறிவு வரவேணுமெண்டா பிள்ளையளை தனிய வெளியில போக விட வேணும் நாலிடம் அடிபட்டாத்தான் அவங்களுக்கு சொந்தக்காலில எப்பிடி நிக்கிறது மற்ற ஆக்களோடை எப்படி நடந்து கொள்றது எண்டு தெரிய வரும் இல்லாட்டி பட்டிக்காடுகளாத்தான்
நாளைக்கு பிள்ளையள் வருங்கள். முந்தி வெளிநாட்டுக்கு வந்த எங்கடை சனங்களில முக்கால் வாசியும் எப்பிடி இஞ்சை நடந்து கொண்டவையெண்டு உங்களுக்குத் தெரியுந்தானே
நீங்கள் நாங்கள் எண்டே சொல்லிக் கதைக்கத்தெரியாமல் நீ உன்னை உனக்கு எண்டு
அசிங்கமா கதைச்சதுகள்தானே இப்ப காரையும் வீட்டையும் வைச்சுக்கொண்டு ஹெலிகொப்டரில
பிள்ளையளை ஏத்தி இறக்கி எழுப்பங்காட்டி பிறந்தநாள் கொண்டாடுதுகள் அங்கை சாப்பாடில்லாமல் மருந்துக்கு காசில்லாமல் எங்கடை சனங்கள் அந்தரிக்க இஞ்சை பெருவாரி
காசைக்கொடுத்து நெய்யரிக்கூட்டம் எழுப்பங் காட்டுதுகள் எட சாகப்போறவைக்கு உதவி செய்ய ஒரு பிட்சா வாங்கிற காசைத் தன்னும் தருமம் செய்யாத நம்ம சனங்கள் எப்பிடித்தான் பகட்டுக்கு
ஆயிரக்கணக்கா அள்ளி இறைக்குதுகளோ கடவுளே கடவுளே // உதுகள் திருந்தாத கேசுகள் - காத்திகேசும் சனங்கள் சிந்திச்சு திருந்த மாய்ஞ்சு மாய்ஞ்சு எத்தனையோ அறிவுரை எழுதிப்போட்டார் கதையா கட்டுரையா கவிதையா ம்கூம் சனம் மருந்துக்குந் திருந்தேல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக