காலம் வளர கலாச்சாரமும் மாறுபட்டு வளரும் இதனை பொறுத்துக்கொள்ள அன்றில் ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டியதே - நடிகனும் நடிகையும் கட்டிப்பிடித்து முத்தங் கொடுத்து உருண்டு புரண்டு நடித்ததை இரசித்து பார்த்தவர்கள்தானே நம் மூதாதையர்கள் அவர்கள் கலாச்சாரப்பற்று உடையவர்களாக இருந்திருந்தால் அப்படியான திரைப்படங்களுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும், விரட்டி விரட்டி பெண்ணின் உள்ளாடை தெரியுமளவுக்கு பலாத்காரக்காட்சிகளை எடுத்து இரசிக்கத்தந்த போது எந்தத் தமிழன் எதிர்த்தான் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்த்து இரசித்தானே - இப்பொழுது தமிழர்கள் பிள்ளைகள் படங்களைப் பார்த்துவிட்டு தாமும் நடு ரோட்டில் முத்தம் கொடுத்து மகிழ்கின்றார்கள் என்ன செய்ய முடியும்
ஆங்கிலக் கல்வி கற்றால் ஆங்கிலப் பழக்க வழக்கம் தானாகவே வந்து சேரும் தடுக்க முடியாது வேலி போடவும் முடியாது அனுபவிக்க வேண்டியதே - லோங்ஸ் போட்ட பெண் இரண்டு கால்களையும் விரித்தபடி காரில் பயணிப்பதை சென்னையில் கண்டு ஆச்சரியப்பட்டேன் சென்னை அமேரிக்கா ஆங்கில நாடுகளை ஐரோப்பாவை முந்திவிட்டது கவர்ச்சியிலும் காமத்திலும் மற்று எல்லா விடயத்திலும் ஆனால் சொந்த மக்களுக்குள் பாகு பாடு பார்ப்பது ஏற்றத்தாழ்வு பார்ப்பது உடல்வருத்திச்செயும் தொழில்களை தொழிலாளர்களை கேவலமாகப் பார்ப்பது போன்ற வற்றில் மட்டும் கற்காலத்தில் நிற்கின்றார்கள் அதில் மட்டும் வெள்ளையர்களை பின்பற்றத் தயாரில்லை, வெள்ளையர்கள் தகுந்த ஊதியம் கொடுத்து தொழிலாளர்களை மதிக்கின்றார்கள் அன்பாகப் பண்பாக நடத்துகின்றார்கள் - "ஏய்" என்று தொழிலாளியை அழைப்பதில்லை பெயரைச்சொல்லி பண்பாக உரையாடுவார்கள் - 25ஆண்டுகள் முன்பு ஒரு இந்தியக்கப்பல் வந்தது அதில் பணியாற்றிய மாலுமிகளை நகரில் சந்தித்து மகிழ்ந்து வீட்டில் விருந்து கொடுத்ததற்குப் பதிலாக அவர்களும் என்னைக் கப்பலுக்கு அழைத்தார்கள் சென்றேன் அங்கு கண்ட காட்சி என்னை ஆத்திரப்பட வைத்தது - ஒரு ஆபிசர் இருந்து உண்கின்றார் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை எடுத்து உணவு பரிமாறும் இந்திய மாலுமி உரித்துக்கொடுக்கின்றார் அந்த ஆபிசர் பெரிய திமிருடன் வாங்கி உண்கின்றார் முகத்தைப் பார்த்து அன்பாகப் பேச மாட்டாராம் எல்லாம் அதிகாரத் தோரணையாம் இந்திய அதிகாரிகளுடன் (ஆபிசர்கள்) வேலை செய்வது மிகவும் வேதனை தருகின்றதென அந்த இனிய தொழிலாளர்கள் வருத்தத்துடன் கூறினார்கள் - என்னத்தைப் படித்து என்னத்தைக் கண்டார்கள் - கேட்டால் > கொஞ்சம் கனிவாக நடந்தால் தலைக்குமேல் ஏறிவிடுவார்கள் என்பதனால் கடுமையாக நடக்கின்றோம் என்பது அதிகாரிகள் தரப்பு வார்த்தை - யாரை நொந்து என்ன செய்வது ஒண்ணுமே புரியலையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக