செவ்வாய், 4 நவம்பர், 2014

வெள்ளைக்காரர்கள்  செய்வது  பலவற்றை செய்ய ஆசைப்படும் நம் பெரும்பான்மை மக்கள் கூட்டம்  அவர்கள்   கடைப்பிடிக்காதவற்றை  மட்டும்  காட்டுமிராண்டிக்காலத்தில் நின்று  கடைப்பிடிக்கின்றார்கள்   சாதி பார்ப்பது  தொழில்  வேற்றுமை பார்ப்பது  பெரிய  அளவில் மரியாதையை  மகத்துவத்தை எதிர்பார்ப்பது - முன்னாள்  அமெரிக்க சனாதிபதி றொனால் ட்ரீகன்  மகன்  தந்தையிடம் இருந்து ஒரு செப்புக்காசும் வாங்காது  ஒரு  மரவேலை செய்யும் தொழிலாளியாகவிருந்து  பின்  சொந்தமாகக் தொழிற்கூடம்  (மரவேலை)  அமைத்து  அதில்  வரும் வருமானத்தில்  வாழ்ந்து  வருகின்றார்  - நம் செல்வங்கள்  அப்பா  அரசியலில் இருந்தால்  வாழைப்பழம்  உரித்துத்தர  ஆள்  வைப்பார்கள்    நம்  சமூகம்  இப்போதைக்கு  திருந்தப்போவதில்லை  என்றே  காட்சிகள் கோலங்கள்  நிரூபிக்கின்றது - வீடுகளை  விசாலமாகக்  கட்டத் தெரிந்தவர்களுக்கு  மனத்தை விசாலமாக்கத் தெரியவில்லை  இன்றும் பழைய  குண்டுச்சட்டிக்குள்  கொம்பில்லாததை  வைத்து ஓட்டுகின்றார்கள் - கடின வேலையா  அவனைக்கூப்பிடு  என்று  அழைக்கும் நிலையில்  மனிதர்களில்  ஒரு  கூட்டத்தை
வேண்டுமென்றே ஒதுக்கி வைத்து வேற்றுமை கடைப்பிடிக்கின்றது  இன்னொரு  மனிதக்குழு
அவர்கள்  சகிப்புத்தன்மையுடன்  கடின  வேலைக்கென்றே தலைமுறை தலைமுறையாக இருக்க வேண்டுமா  இப்படி  ஒரு  மக்கள்  கூட்டத்தை  அடிமைகளாக  வைத்துக்கொண்டு  சாமிக்கு
கோயில்கட்டி  பட்டுடுத்தி  பொன் போட்டு  மீசை முறுக்கி எழுப்பங்காட்டுவதனால் என்ன
பெரிய  மகிழ்வைக்காண்கின்றாய் -  அவர்கள்  பிள்ளைகள்  படித்து நல்ல  தோற்றத்தில்
வரக்கூடாது என்பதற்காக  அவர்களுக்கு ஊதியத்தையும் சொற்பமாகக் கொடுத்து வைத்திருக்கின்றாயே   இததான்  நீ சாமி  கும்பிடும் லட்சணமா   இதுதான்  உன் பண்பாடா - குதிரை முதுகிலிருந்து
அதை  ஓட்டுகின்றவனுக்கும்  உனக்கும்  என்ன  வேறுபாடு  -  நீ உன்  இனத்தானுக்குள்
வேற்றுமை காட்டுவாய்   சிங்களவன் உன்னைத்  தாக்கினால்  தருமமில்லை என்று பொங்குவாய்
சிங்களவன்  செய்ததையே  நீயும்  உன்  இனத்தில்  குறைந்த சாதிக்காரன் என்பவனுக்கு செய்தாய்  பிறகு----- 
(சிங்களன் செய்த கொடுமைகளை நியாப்படுத்துவதில்லை கட்டுரையின் நோக்கம்  சாதி வெறி
கொண்டவர்களை  சிந்திக்க வைப்பதே)
தராசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக