வாழ்வை அனுபவித்து வாழ காசை செலவிடாது சேர்த்து சேர்த்து அதை பெருக்கி சீதனம் கொடுக்கவும் அளவுக்கு மீறி சொத்துக்களை குவித்து வாழும் வாழ்வு முறையை உருவாக்கி விட்டது நம் மூதாதையர்கள் அவர்கள் காட்டிச்சென்ற வழியையே சற்றும் சிந்தியாது சரி பிழை நோக்காது செம்மறி ஆடுகள் போல் இன்றும் நம் பெருவாரிக்கூட்டம் அதே பாதையில் நடைபோடுகின்றது. தனது செல்வத்தை தனது இரத்த உறவுகளே அனுபவிக்க வேண்டும் என்று கருதி சொந்தத்துக்குள்ளே மகளை திருமணம் செய்து வைத்தார்கள், இதனால் சாதிப் பிரிவு வளர்க்கப்பட்டது நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று சக மனிதர்களை ஒதுக்கும் அசிங்கம் வலுப்பெற்றது - ஆங்கிலம் படித்தார்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள் வெள்ளையர்களுடன் உட்கார்ந்து தொழில் பார்த்தார்கள் தவிர தனது சமூகம், இனம் எப்படி இருக்கின்றது அதை நல்ல திசைக்கு சமதர்ம வழிக்கு இட்டுச்செல்ல எந்தப் படிப்பாளியும் சிந்திக்கவில்லை துணியவில்லை குரலும் கொடுக்கவில்லை இது பற்றி பல்கலைக்கழங்கள் கூட சிந்திப்பதில்லை, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீண்டும் மீண்டும் அதே தொழிலை செய்து குப்பி விளக்கில் குடிலுக்குள்ளே வாழ்ந்து வாழ்ந்து குறிப்பிட்ட வர்க்கத்துக்கு அடிமைகளாகவே வாழ வேண்டுமா . எத்தனை ஆண்டுகளாச்சு இனியும் அசிங்கம் தொடர வேண்டுமா , வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளின் நெஞ்சிலும் பெற்றோர்கள் நஞ்சை ஊற்றுகின்றார்களே , அவருடன் பழகு இவருடன் பழகாதே என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து பிரிவினை வளர்க்கின்றார்களே .
வெள்ளைக்கார மக்களை நோக்கும் போது அவர்கள் இப்படி தங்கள் இனத்துக்குள் யாரையும் ஒதுக்குவதில்லை மாறாக இயலாதவர்களை (போதைக்கு அடிமையானவர்களை) மீட்டு புனர்வாழ்வு அளிக்கும் நெறிமுறையை வலுப்படுத்த நல்ல கட்டமைப்பை நிறுவி நல்லபடி நடாத்துகின்றார்கள் . தாழ்ந்து கிடக்கும் நம் மக்களின் பிள்ளைகள் படிக்க செழிக்க இன்று உயர்நிலையில் இருக்கும் நம் மக்கள் கூட்டம் ஏதாவது புதிய வகையில் சிந்தித்து செயற்படுமா இல்லை இன்னும் காதல் பிரிவையும் நடந்து முடிந்த சோகத்தையுமே கவிதையாக்கிக்கொண்டே வாழ்ந்து சாகுமா - நல்ல படைப்பாளிகள் அறத்தையும் சமத்துவத்தையும் மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் விடுத்து வெறும் சுவையூட்டும் எழுத்தை மட்டும் எழுதி யாருக்கும் பயனில்லை ஒருவரின் எழுத்தால்
ஒருவர் சிந்தித்து நல்வழிக்கு தன்னை இட்டு செல்லுதலே பயன் தரும் இப்பொழுது இதை
வாசிக்கும் ஒருவர் தன்னை நோக்கி சிந்திப்பார் சற்றாவது தனது எண்ணக்கருத்தை நல்ல நிலைக்கு மாற்றுவார் என்பது திண்ணம் இப்படியாக இருக்க வேண்டும் எழுத்து என்று பணிவுடன் பகிர்வேன்.
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக