இப்படிப்பட்ட எழில் நாட்டில் ஒன்றுபட்டு வாழமாட்டாது இனப்பகை கொண்டு இனங்கள் பிரிந்து அடிபட்டு சாவதை நினைத்தால் நாம் எவ்வளவு முட்டாள்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது
பொதுவில் யாழ்ப்பாண மக்கள் ( பெரும்பான்மை) உல்லாசமாய் இயற்கையை எழிலை அனுபவித்து வாழத்தெரியாதவர்கள் சமய சடங்குகளை சாட்டி கீரிமலைக் கேணிக்கு நீராடச்செல்வார்கள் அன்றில்
ஒரு விடுமுறை தினத்தில் கடற்கரைக்கோ வேறு இடங்களுக்கோ செல்வது மிக மிக குறைவு இல்லை என்றே சொல்லலாம் . ஒரு திரைப்படத்தை பார்க்க செல்வதானாலும் ஊருக்குள் குறிப்பாக சொந்தத்துக்குள் நாலாம் பேருக்குத் தெரியாமலேயே சென்று பார்க்க வேண்டிய சூழ்நிலை யாழ்ப்பாண வாசிகளுக்கு - காசு சேர்ப்பது வயல் வாங்குவது வளவு வாங்குவது வீடு கட்டுவது (ஏற்கனவே ஒன்று இருக்க ) சீதனம் கொடுப்பது செத்துப்போவது, ஒரு பெரிய எழுப்பங் காட்டும் நோக்குடனேயே போலியான மாய வாழ்வு - சிங்களவர்களுடன் வாழ்ந்த அனுபவத்தில், அவர்கள் உல்லாசமாக வாழ்வை அனுபவிப்பார்கள்; ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலாச் செல்வார்கள் கீரிமலைக்கு , கசொர்ணா கடற்கரைக்கு பேருந்தில் உல்லாசப்பயணம் அனுபவிக்க வந்த சிங்கள மக்களை அன்று இலங்கையில் வாழ்ந்த போது கண்டிருக்கின்றேன் - இங்கு (வெளிநாட்டில்)பார்த்ததிலிருந்து நமது ஆட்கள் பலருக்கு ஒரு தேநீர்க் கடையில் சென்று தேநீர் பருகி களிக்கக்கூடத் தெரிவதில்லை வீட்டுக்குள்ளேயே இருந்து தொலைக்காட்சி பார்ப்பது முழுக்காசையும் சீட்டு போடுவது இதர பிற செலவுகளுக்கோ தருமம் செய்யவோ மேலதிக காசு வைத்திருப்பதில்லை சொற்ப காசில் சிக்கனமாக (நப்பித்தனம்) சோறு கறி சமைத்து சாப்பிடுவது, பிறகு சீட்டுக்காசை எடுத்துக்கொண்டு இலங்கை இந்தியா செல்வது அங்கே உள்ளவர்களுக்கு எழுப்பங் (பந்தா) காட்டுவது புளுகுவது இதுதான் 25 ஆண்டுகளில் இங்கு நான் காணும் பெருவாரி யாழ்ப்பாணத்தார் வாழ்வு காசு காசு வேறு அறியார் நம் மக்கள் "காசு வேண்டும் மகிழ்வாக வாழ அதற்காக காசே வாழ்வாகுது" - நானும் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன்
என்ன மாயமோ எனக்கு என் சனத்தைப்போல வாழ்வதில் நாட்டமில்லை
அந்த வழிக்கு நான் எண்ணவுமில்லை - இலகு வாழ்வு அன்றாடம் மகிழ்வாக இருக்கும் மனோபாவம்
இல்லாதவர்களுக்கு கொடுத்துதவும் குணம் எல்லோரையும் மதிக்கும் பணிவு இவைகள் எனக்குள் இருக்கும் தன்மைகள், தானாக வந்தது பாதி நானாக சிந்தித்து என்னை உருவாக்கியது மீதி இன்னும்
நாளும் என்னை நல்லவனாக்க மேலும் மேலும் படிக்கின்றேன் பணிகின்றேன் அதுவே இப்போதைய நிலை - இங்கு ஒருவர் இறக்கும் வரை, அரசு மக்களை பசியின்றி பாதுகாக்க நோய்வந்தால் மருத்துவம் பார்க்க சகல வசதிகளும் செய்திருக்கின்றது பிறகு நான் எதற்காகவும் பெருந்தொகை சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை - பயணங்கள் செய்யவும் விடுதிகளில் தங்கவும் ஊர் உலகைப் பார்க்கவும் கூடப்பழகும் நலிவுற்றோரை மகிழ்விக்க சற்று பொருளுதவி செய்யவும் உண்ணவும் கண்ணில் காணும் ஏழைகளுக்கு (இரப்போருக்கு) கொடுக்கவும் கொஞ்சம் சிறுதொகை சேர்த்தால் போதும் என்பது இன்றைய தேவை நினைப்பு . இதுதான் என் பலம் + என் பலவீனம் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ அறியேன் பராபரமே அன்புமிகு பரமேசுவரா.
இப்படியொரு படத்துக்கு நான் இப்படி எழுதுவேன் என்று நானும் சிந்திக்கவில்லை தானாக சிந்தனை வந்து விழுந்தது .
"அன்பே சிவம் அறிவே யாவும் பணிவே பண்பாடு "
" கொடுப்பதுவும் துய்ப்பதுவும் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக