செவ்வாய், 4 நவம்பர், 2014

சிந்தனையால் அறிவு மேம்படுகின்றது  சிந்தனைக்கு  கல்வி வேண்டும்   அன்றில்  உலகப் படிப்பு வேண்டும்,  மனம்  பொறிகளின்  ஆளுமைக்குள் வதங்குவது  அது  கட்டுக்குள்  நிற்க  மறுக்கும்
 கேடுவரும் என்ற  சூழ்நிலையை அறிவு  சிந்தித்து கொடுத்தால்  அடக்கும்  நிலையில் மனம் தனக்கான தூண்டுதல் நிலையிலிருந்து  பின்வாங்கும்  சந்தர்ப்பம்   கிட்டினால்  வேலியைத்தாண்டும் பெரிய  தலைவர்களாக மக்கள்  போற்றும்படி வாழ்ந்தவர்களே  சின்ன சின்ன விடயங்களில் மனதை அடக்க முடியாது  திணறியிருக்கின்றார்கள்  - காமராசர்   உணவுப் பிரியம்,  அண்ணா  வெற்றிலை பாக்கு நேசம் , கலைவாணர்  கள்  மகிழ்வு , கண்ணதாசன் , எம் ஜி ஆர்   எதிலென்று  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை ,  நேரு  புகைத்தல் , இன்னும் பலர்  சில சில  சின்ன  சின்ன  ஆசைகளில் மனதை
வெல்ல முடியாது  தோற்றார்கள் -  சாதா  மனிதர்கள் நாம்  பெரும் போராட்டத்துக்குள்  நிற்கின்றோம்
அறிவுக்கும் மனதுக்கும் நடக்கும் போராட்டத்தில் அனேகமாக  மனமே  வெல்கின்றது - மனதை
வென்றவன்  ஞானி ஆகின்றான்  - விவேகானந்தர்  ,  இராமகிருஷ்ணர்  , புத்தர்  இந்த வரிசையில் சிலர்  நீள்வார்கள். மனக்கட்டுப்பாடு  ஆரோக்கிய வாழ்வுக்கு  இன்றியமையாதது  . 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக