பொன்மேகம் கரைத்த புனல்
மண்மேகம் நிறைத்து வழிய
தன்தேகம் வளர்க்க மனிதன்
உழவுசெய்தான் இலவச மருந்தாக
மழை பெய்தது அதற்குக் கட்டணமில்லை
வரியும் கேட்பதில்லை வட்டியும் பார்ப்பதில்லை
அதனால் விளைந்த பயிரை பணமாக்கிக் கொழுத்த
மனிதனே வரியும் வட்டியும் கேட்கின்றான்
எங்கிருந்தோ கடல் தாண்டி வந்த வெள்ளை
எங்கள் வயலையும் வாழ்வையும் அடிமைகொண்டானே
எம் நிலம் பார்த்து செழிப்பை வியந்து
நம்மைக் கொள்ளையடித்தானே
கொலைசெய்தானே தன் கொடி நட்டானே
என்ன துணிவெடா அவனுக்கு
அவன் கூலி வேண்டி அடிமையாகி
நம்மவன் சேவகம் செய்து வயிறு வளர்த்தானே
தன்மானத்துடன் எதிர்த்த மறவரைக் காட்டிக் கொடுத்து
பரிசாக வயல்களையும் வளவுகளையும் பெற்றான்
தீரத்துடன் போராடி மாயந்தவரை அவரின்
எச்சங்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி
நாட்டாண்மை காட்டிய நரிகள் நய வஞ்சகர்கள்
நல்லவர்கள் போல் வேடமிட்டார்களே
கல்வியையும் கழகங்களையும் தமக்கே
என்று கொள்ளும் விதம் வறியவர்களை
முன்னேற விடாது முடக்கினார்கள்
எந்த மேதாவியும் இன்னலுற்றோரை
ஏற்றிவிட எண்ணவில்லை
மாடிவீடு கட்டுவதிலும் கார்வாங்கி ஓட்டுவதிலும்
சுகபோகம் அனுபவிப்பதிலுமே கொழுத்தவர்
குறியாக இருந்தனர் உருண்டனர் புரண்டனர்
பணமென்னும் கத்தைகளைப் பதுக்கி
படாடோபம் காட்டியவர்கள் நெஞ்சில்
நஞ்சே நிறைந்திருந்தது
அவர்கள் வாரிசுகளும் அப்பன் பாட்டன் பூட்டன்
வழியிலேயே நடை போடுகின்றார்கள் இன்று
இந்த நிலை மாறுவதெப்போ
அழுபவர்கள் சிரிக்க
இன்று சிரிப்பவர்கள் சிந்திப்பார்களா ???
ம.இரமேசு
மண்மேகம் நிறைத்து வழிய
தன்தேகம் வளர்க்க மனிதன்
உழவுசெய்தான் இலவச மருந்தாக
மழை பெய்தது அதற்குக் கட்டணமில்லை
வரியும் கேட்பதில்லை வட்டியும் பார்ப்பதில்லை
அதனால் விளைந்த பயிரை பணமாக்கிக் கொழுத்த
மனிதனே வரியும் வட்டியும் கேட்கின்றான்
எங்கிருந்தோ கடல் தாண்டி வந்த வெள்ளை
எங்கள் வயலையும் வாழ்வையும் அடிமைகொண்டானே
எம் நிலம் பார்த்து செழிப்பை வியந்து
நம்மைக் கொள்ளையடித்தானே
கொலைசெய்தானே தன் கொடி நட்டானே
என்ன துணிவெடா அவனுக்கு
அவன் கூலி வேண்டி அடிமையாகி
நம்மவன் சேவகம் செய்து வயிறு வளர்த்தானே
தன்மானத்துடன் எதிர்த்த மறவரைக் காட்டிக் கொடுத்து
பரிசாக வயல்களையும் வளவுகளையும் பெற்றான்
தீரத்துடன் போராடி மாயந்தவரை அவரின்
எச்சங்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி
நாட்டாண்மை காட்டிய நரிகள் நய வஞ்சகர்கள்
நல்லவர்கள் போல் வேடமிட்டார்களே
கல்வியையும் கழகங்களையும் தமக்கே
என்று கொள்ளும் விதம் வறியவர்களை
முன்னேற விடாது முடக்கினார்கள்
எந்த மேதாவியும் இன்னலுற்றோரை
ஏற்றிவிட எண்ணவில்லை
மாடிவீடு கட்டுவதிலும் கார்வாங்கி ஓட்டுவதிலும்
சுகபோகம் அனுபவிப்பதிலுமே கொழுத்தவர்
குறியாக இருந்தனர் உருண்டனர் புரண்டனர்
பணமென்னும் கத்தைகளைப் பதுக்கி
படாடோபம் காட்டியவர்கள் நெஞ்சில்
நஞ்சே நிறைந்திருந்தது
அவர்கள் வாரிசுகளும் அப்பன் பாட்டன் பூட்டன்
வழியிலேயே நடை போடுகின்றார்கள் இன்று
இந்த நிலை மாறுவதெப்போ
அழுபவர்கள் சிரிக்க
இன்று சிரிப்பவர்கள் சிந்திப்பார்களா ???
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக