வியாழன், 13 நவம்பர், 2014

தைலாப்பெட்டிகள்  யாழ்ப்பாண  வீடுகளின்  களஞ்சியம் அதற்குள்தான்  தமிழர்களின்  உயிர்காக்கும்  மருந்துகள்  அடக்கம் - அரிசி மா சீனி பருப்பு உளுந்து கொத்தமல்லி என்று  நிறைய  நிறைய  நிறைந்திருக்கும்  களஞ்சியம்  தைலா , கோர்க்காலி அன்று தமிழன் கண்டு பிடித்த  மேசை
அதன்மீதே  பெட்டிகள்  மற்றும்  கனமான  யாவும்  குந்தும்  அவற்றிற்குள்  பட்டும் நகையும்
இதர பெறுமதியான யாவும் அடக்கம்  அப்படியே வெளியில் வந்தால் அட்டாளை  நிமிர்ந்து நிற்கும்
கழுவிய பாத்திரங்கள் யாவும்  ஏந்தி நிற்கும் அட்டாளை,  தேங்காய் பொச்சும் குருவுமணலும் புளியும்
பாத்திரங்களைக்  கழுவி விளக்கப்   பயன்படுத்தப்பட்டன    இரசாயனக்  கலவைகள் கலக்காத  வாழ்க்கை  அதனால் மனதும் குற்றமின்றி  இருந்தது  - கோயில் குளம் ஆடு மாடு கேணி வயல்  தோட்டம்,  கடல், கரை  ஆடல் பாடல்   கொண்டாட்டம்  முக மலர்ச்சி  மூளை சுறுசுறுப்பு  முப்பரிமாண  நட்பு உறவு எந்நேரமும் துணைகள்  தோழோடு  தோதகமில்லா  வாழ்வு  இன்று  மனிதர்கள்  நிறையவே  மாறிவிட்டார்கள்  ஐரோப்பிய  வாழ்வியல்  எளிய முறைக்கு  வாழ  அழைத்துவிட்டது  நானுண்டு என்பாடுண்டு  வேற்று  நபர்களின் மூச்சுப்பட்டால்  அருவருப்பு உண்டாகின்றளவுக்கு  ஐரோப்பியம் மாற்றிவிட்டது சிந்தையை  அதிலே  புதிய கண்டுபிடிப்புக்களினால்  உருவான கருவிகள் தொடர்பாடற்  சாதனங்கள்  மனிதனை வீட்டோடு  இருத்தி  விட்டது  ஆனால்
நகரங்கள் நாடுகள் கண்டங்கள் எட்டவிருக்கும் ஆட்களுடன்  அன்பைக்   காட்டவும்  அறிதலைப்  பகிரவும்  வழிதேடித்தந்திருக்கின்றது  உடல்தான் அசையாமல் நோய்க்குப்   பாதை திறக்கின்றது 
நடை பயிலுதல் குறைந்து  உடல் இறுகிவருகிறது  உடற்பயிற்சி செய்ய விளையாட்டுக்களில் ஈடுபட
மனம்  இடந்தர சோம்புகின்றது  ஆயாசங் கொள்கின்றது  விழாக்களுக்கு செல்லவும்  மனிதர்களைக்காணவும்  வெறுப்பு மேலிடுகிறது  பக்குவம் பணிவு  இல்லாதோர்  நிறைந்திருக்கும்
அவைகளில்  வீற்றிருக்க முடிவதில்லை  இன்று இப்படி  நாளை  மாறலாம்  மாற்றமே  மாறும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக