தியாகம்
அன்றும் வந்த மெல்லிய மலர்க்காற்றில்
இலைகள் சிரிக்க மகிழ்ந்து அசைந்தது பூவரசு
அதன்மடியில் மைனாவும் பிலாக்கொட்டைக்
குருவிகளும் பறந்து வந்து குந்தியிருந்து
காதல் மொழிபேசி மகிழ்ந்தன மயங்கின
என் மகிழ்வுக்கும் அதுவோர் இலை தந்தது
அதைப்பறித்து குழலாக்கி ஊதி மகிழ்ந்தேன்
சிறிது நேரத்தில் காற்று விசைக்க தலைசீவிய
முதிர்ந்த இலைகள் பிரியாவிடை கொடுத்தன
ஐயோ ஐயோ கணேசு காங்கேசன்துறையில்
சீமெந்தாலையில் மின்சாரம் தாக்கி உயிர்---
ஊரே கூடியழுதது உடல் வீடு வந்தது ஒப்பாரி ---
பாடையில் கணேசை ஏற்ற முன்னரே அவனுக்காய்
உயிர் துறந்தது பூவரசு ; சிதைக்கு விறகாக
குருவிகள் பறந்து தேடின தம் காதலனை
ஐயோ காணவில்லையே என்னாயிற்றோ துடித்தன
ஈர நெஞ்சு அவைகளுக்குமுண்டு யாரறிவார் கண்ணீரை
வேலியிற் காவலனே ; வீட்டில் ஒருவர் பிணமானால்
கூடவந்து எரிகின்றவன் நீயொருவனே
தியாகத்தின் மொத்தமும் நீதான் பூவரசே பூவரசே
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக