செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அறிவு  வேண்டும் 

தாள்  விரித்தால்  தலையில்  வரவில்லை  
யோசித்தால்  யோசனையில் சிக்கவில்லை 
ஏனிப்படி  இருக்கின்றது  எனக்கு என்னானது 
பூ மலர் வாசம்  புன்னகையின் நேசம் கனியும் 
கானத்தின்  மயக்கம்  கண்களில்  வருகின்றது 
உலகம்  கேட்க்காத  இசை  எங்குமில்லை  
விண்ணை  பாரத்தால்  விளங்கும்  வாழ்வினழகு 
தன்னாலே  கற்றவர் யாருமில்லை  தரணியிலே 
தாயகம் இல்லாத பறவைகள் உண்டோ அவனியிலே 
குகை  புலிக்கு  அங்கே சிங்கம் வந்தால் அதுக்கு  
மான்கள்  வராத  பிரதேசம்  வன்மான் கொடுந்தேசம் 
சிரிக்கும்  குரங்குகள்  குளிக்கும் குருவிகள் 
ஓடும்  அருவிகள்  பாடும் குயில்கள்  சிந்தையில் 
கற்பனைக்கு  எல்லை இல்லை  அதுவும் ஆசைபோலே 
ஆகா  அழகு  யார் வெறுப்பார்  அனைவரும்  இரசிப்பார் 
தம்மில்  பெரியவர்  தன்னை  தாழ்ந்து  வணங்குதல் நன்று 
இப்பிறவி  பொருளுக்கு  மறுபிறவி  எதற்கோ  அறியோம் 
எப்பிறவி எடுத்தாலும் இறைவா அறிவுதரவேண்டும் 

செங்கவி 
ம,இரமேசு 

1 கருத்து: