வெள்ளி, 3 அக்டோபர், 2014

அவளுக்கு  அது கடைசி ------மி

1979 என்று நினைக்கின்றேன்  பாடசாலையில்   விஜயதசமி  விழா  வெகு கோலாகலமாக  நடந்துகொண்டிருந்தது ஜெயப்பிரபா  அன்று  ஆடியதும் பாடியதும் பேசியதும்  இன்றும் நெஞ்சில்  வரிகள் மறந்து கிடந்து ஆடுது  அன்று அவளுக்கு  9 வயது இருக்கும் அழகோ அழகு  அந்தச்சிறுமி,  ஊர்மக்கள்  எல்லாம் வந்து  அவள்  செய்த  கலைநிகழ்வுகளைப்பார்த்து  ஆகா  அருமை என்று  பாராட்டி  மகிழ்ந்தார்கள், ஆசிரியர்கள் மாணவர்கள்  அனைவரும் ஜெயப்பிரபாவைப்பற்றியே  கதை கதையாகக்  கதைத்தார்கள்  இந்த வயதில்  இத்தனை  திறமையா  என்று  அதிசயித்தார்கள்  நாடகம்  பழக்கிய மானிப்பாய் மரியாதைக்குரிய  அமரர்  கே  . தர்மலிங்கம்  ஆசிரியரின்  ஆளுமை  அன்று  எனக்குப் புரியாதவொன்று. ஜெயப்பிரபா  அவரின்  செயல்முறைகளை  நன்றாக உள்வாங்கி  மேடையில்  அனைவரும் வியக்க அசத்தினாள்,  எல்லோரும்  கொண்டாடி முடிந்து  இரவு  9 மணியளவில்  வீட்டுக்கு சென்று விட்டோம்,   மறுநாள்  பாடசாலை  வந்தால்  எல்லோரும்  துயருடன்  துவண்டார்கள் ஆம்  நிகழ்வுகள்  முடிந்தபின்  வீடு சென்ற  ஜெயப்பிரபா  இரவு  மூளைக்காய்ச்சல்  பெருகி இவ்வுலகுக்கு வணக்கம்சொல்லி விடைபெற்றுவிட்டாள் - சனங்களின்  கண்ணூறுதான்
அந்தப்பிள்ளையை  ""கொண்டுபோவிட்டுது """ என்று  ஊரெல்லாம்  மக்கள்  நாவாடித் துயர்
கொண்டார்கள். நெஞ்சைத் தாக்கிய  சோகம்  என்றும் நினைவில் .  

ம.இரமேசு 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக