வியாழன், 16 அக்டோபர், 2014

அன்பான சபா, நல்லதொரு  விடயம் தொட்டீர்கள்  உங்கள்  சிந்தனை கண்டு சிரித்தேன்  நன்று  நன்று -  தசரதனுக்கு  அறுபதினாயிரம்  மனைவியர்  வரக் காரணமுண்டு  அதை பலரும்  பேசுவதில்லை  ஒரு  சந்தர்ப்பத்தில் முனிவர் ஒருவர் கொடுத்த சாபத்தின் விளைவே  தசரதனுக்கு  60 000 மனைவியர்  அந்த  சாபம்  என்னவெனில்  நீ மணக்கோலத்தில் இல்லாத  நாள்  நீ இறப்பாய்  என்பதே  ஆனாலும்  தசரதன்
விரும்பி எந்தப்பெண்ணையும்  துன்புறுத்தி மணக்கவில்லை   தசரதனின் நல்லாட்சியும்  நல்ல குணமும் அறிந்து  மக்கள்  தங்கள்  அரசர்  பலகாலம் வாழவேண்டும்  என்பதற்காக  தங்கள்  பெண்ணின்  சம்மதத்துடன்  நாளும்  ஒரு பெண்ணை மணமுடிக்க  செய்து மன்னனை  காப்பாற்றினார்கள்  குறிப்பிட்ட கால  வரையறைக்கு அப்பால்   சாபத்திலிருந்து  விமோசனம் பெற்றார்  தசரதன் 
தசரதன்  இறந்திருக்கும் பொழுது  கம்பர்  அதற்குள்ளும்  தனது  நகைச்சுவை ஒன்றை  பின்னுவார்
தையல்  கடலில் குளித்தவனை  இன்று தைலக்கடலில்  குளிப்பாட்டுகின்றார்களென்று
மற்று  அங்கிருந்த பெண்களின்  கண்கள் ஒழுக்கமுடையது  5 பொறிகளுக்கு  சஞ்சலம்
ஏற்படுத்தாது  இருந்தது அதனால்  உங்கள்  மொழியில்  சைட்  அடிக்க  எந்த  ஆடவனும்  விழைவதில்லை  - பாட்டை  கேளுங்கள்  -

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
 
பொருள் -  ஆசலம்: சஞ்சலம். காசு வைர மணிகள் (வைரமணிகளால் கோக்கப்பட்ட ஆரங்கள்) பூசல் போர்.
சஞ்சலத்துக்கு மனிதனை உள்ளாக்கக்கூடிய ஐந்து புலன்களாகிய அம்புகளும்; எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஒலியை எழுப்புகின்ற வைரமணிகள் பதிக்கப்பட்ட ஆரங்களை அணிந்த பெண்களுடைய கண்களாகிய போர் அம்புகளும், ஒருபோதும் ஒழுக்க நெறியைவிட்டு விலகி அப்பால் செல்லாத இயல்பை உடையதாகிய கோசல நாட்டை அணி செய்யும் சரயு நதியின் பெருமையைக் கூறுவோம்.
மனிதனை ஒழுக்க நெறியைவிட்டு அப்பால் செல்ல எப்போதும் தூண்டுகோல்களாக விளங்குபவை என்ற காரணத்தால் ஐம்புலன்களை அம்புகளாகச் சொன்னார். ஆடவர்களுடைய புலன்களாகிய அந்த அம்புகளுக்கு எதிர் அம்புகளாக விளங்குவன என்று (விலையுயர்ந்த மணிகள் பதித்த பல ஆரங்கள்ஒன்றோடு ஒன்று மோதி ஒலியெழுப்பும் தன்மையை உடையவைஎன்பதனால் செல்வச் செழுமை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பு. அத்தகைய பெண்களின் (போருக்கு அழைக்கும் தன்மையைக் கொண்ட கூரான) கண்களும் ஒழுக்க நெறியைவிட்டு நீங்காத தன்மையை உடைய நாடு கோசலம். ஆடவர், புலன்களை நெறிப்படுத்தியவர் - வாழ்க  நலம்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக