புதன், 22 அக்டோபர், 2014

மரியாதை மிகு  தோழி மாலினி மாலா  அவர்களுக்கு  -  நான் உங்களுக்கு  தீபாவளி  வாழ்த்து அனுப்பவில்லை  காரணம்  நீங்கள் சோகங்களுடன்  நடை போடும்  ஒருவர்  எந்த மகிழ்வும்
உங்களை  திசை  திருப்பாது  என்பதானாலேயே -  ஒவ்வொரு  சிந்தனைகளிலும்  நான்  எண்ணிப்பார்க்கின்றேன்  உங்களின்  ஆக்கத்தில் இருந்த  ஆழமான  வலி மிகுந்த
வரிகளை  " பிள்ளை  ஆமியிடம்  பிடிபடுகிற  நிலைவந்தால்  கிணத்துக்குள்ளை  குதிச்சுடு "
இதை எழுதும்  போது  என்  கண்கள்  பனிக்கின்றன  என்னால்  உணர முடிகின்றது
அந்த வார்த்தையை   சொல்ல  பெற்றோர்  எவ்வளவு சிந்தித்திருப்பார்கள்  அதை  கேட்ட உங்கள்
மனம்  எப்படி  இருந்திருக்கும்  என்று 
இதற்குமேல்  என்னால் ஒன்றும்  சொல்ல முடியாது  தோழி  - அமைதி கொள்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக