வெள்ளி, 24 அக்டோபர், 2014


தென்னாட்டின்  முக்கிய நடிகர்  எஸ் எஸ் ஆர் 

 (1928 - தைமாதம்  பிறந்தார்    -   ஐப்பசி  24/ 2014      வானகம் )

திரையுலகின்  பொற்காலத்தில்  அதற்கு  உரமூட்டிய நடிகர்கள்  பலர்  அதில் முக்கிய இடம் வகிப்பவர்
இலட்சிய நடிகர்  எஸ் எஸ் ஆர்  அவரின் மறைவு கேட்டு  மிகுந்த வருத்தம், ரத்தக்கண்ணீர்  ஆலயமணி  சாந்தி பச்சைவிளக்கு பூம்புகார்   சாரதா  பூமாலை  தெய்வப்பிறவி  மனோகரா  போன்ற படங்களில்  அவரின்  நடிப்பு  முத்திரை ஆழமாகப் பதிந்தது  தமிழ் உச்சரிப்பில்  சிவாஜிக்கு பக்கமாக  நின்றவர்  எஸ் எஸ் ஆர்  என்பது தமிழுலகம்  போற்றும் பொதுவான  போற்றுதல் கருத்து.  அழுத்தமான  உச்சரிப்பு  நிமிர்ந்த  நடிப்பு கூனிக்  குறுகும்  பாத்திரங்கள்  ஏற்காதவர் - முத்துராமன்  மேஜர் சுந்தர்ராஜன்  போன்றோர் வருமுன்  சிவாஜிக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்த   துணை நடிகர்  எஸ் எஸ் ஆர்  . 

எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜேந்திரன் 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்[2]. எம். ஜி. ராமச்சந்திரன் ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரன் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது.
எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ். எஸ். ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் தோன்றி நடித்தார்கள்.
சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் சின்னத்திரையில் தோன்றி நடித்தார். 1980களில் மோகன் பிரபலமாக இருந்த நேரத்தில் அன்பின் முகவரி என்ற படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்தார்.
 இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்
   ஆர்  பார்த்தசாரதியின்  இசையில்  பாடகர் திலகம்  பாடிய  கிழக்கு  வெளுத்ததம்மா  என்ற பாடல்  அவன் பித்தனா  திரைப்படத்தில்  ஓங்கி ஒலிக்கும்  விறு விறுப்பான  பாடல்  அப்பாடலுக்கு  எஸ் எஸ் ஆர்  நன்றாக  நடித்தது  அற்புதம் மறக்க முடியாதது   ஐயாவின்  உண்மை  அமைதிகாணட்டும்   ஓம்  அமைதி  அமைதி. 

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக