வெள்ளி, 24 அக்டோபர், 2014

முருகன் அழகு

 (கந்தஷஸ்டி )

வானைப் பிளக்கும்  வடிவழகு
வடிவேலன் கந்தன்  எழிலழகு
மானைப் பழிக்கும் விழியழகு
தமிழ் மையின்  நிற உடலழகு
என்றும் கந்தன் வடிவேலழகு 
சிவமைந்தன் வழியே நடைபழகு
ஏழையின் சிரிப்பில்  அருளழகு
எம்மவன்  நல்கும்  கொடையழகு
தமிழ் முதல்வன்  மலரடியேயழகு  
முருகன்  பற்றை பற்றுவோரழகு

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக