சனி, 4 அக்டோபர், 2014

உலகில் சிரிக்கத்தெரிந்த ஒரே   உயிரினம்   மனித  உயிரினம் மட்டுமே  அப்படியிருந்தும்  சிலர்  புன்னகைக்க  மறுக்கின்றார்கள்,  இங்கே (டென்மார்க் ) வேலை கிடைத்து  விட்டால்  நிறுவனம்  ஒரு  புகைப்படம் எடுத்து  ஒரு  தொங்கு பலகையில் மாட்டி இவர் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்று மற்றைய  சக  தொழிலாளர்களுக்கு  காட்டும்  அப்படி  புகைப்படம் எடுக்கையில்  சிரிக்கச்சொல்வார் நிறுவனத்தின்  தொழிலாளர்  தலைவர்,  சிரித்த முகமே எல்லோரும் விரும்புவது மற்றவர்கள்  சிரிப்பதும்  (மெல்லிய முறுவல்)   விடுவதும்  அவர்கள்  சுதந்திரம்  என்ன  உணர்வில் இருக்கின்றார்களோ  நாமறியோம்,  பொதுவாக  நட்புடன் புன்னகைப்பது மிக நல்ல  பழக்கம், தமிழர்களின்  பிள்ளைகள்  தமிழரைக்கண்டால்   முகத்தை  திருப்புவதும்  வெறுக்கத்தக்க  பார்வை சிந்துவதும் மிக மிக அசிங்கம், பெற்றோரால்  ஊட்டப்பட்ட    அசுத்த ஊட்டமே அது  இங்குவந்தும்  இன்னும்  சாதி  பேதம்    பார்த்து  பிரிவினை நாடுவோர்  அதிகம்  வெளியில்  சீ  சீ  நாங்கள்  அதெல்லாம் பார்க்கிறதில்லை என்று பொய் சொல்லுவார்கள்  நாகரிகத்துக்காக - ஒரு  பெண்
தமிழாசிரியையாக  இருந்தார்   அவர்களின்  மகள்  ஒருவரை  காதல் செய்தார்  உடனே  அந்நகரத்தில்
வாழும்  பெற்றோர்கள்  (யாழில்  உச்சிமக்கள்  என  தம்மை பறைசாற்றுவோர்)  உங்கள்  மகள்
சாதியில் குறைந்தாளை  காதலிப்பதனால்  நாங்கள்  இனிமேல்  உங்களிடம்  எங்கள்  பிள்ளைகளை
படிக்க  அனுப்ப மாட்டோம்  என்று  சொல்லி  துவேச உணர்வினை ஓங்கி  ஒலித்தார்கள்  அந்த
ஆசிரியை  வேறு நகரத்துக்கு  மாறிச்சென்றுவிட்டார்  இது நடந்து 20 ஆண்டுகளிருக்கும்  இன்றைய
நாட்களில்  முன்னைவிட   சாதித்துவேசம்   நன்றாகப்   பாராட்டப்படுகிறது   விழாக்களில்  வேறு
சாதியாக்கள்  பங்கு கொண்டால் அவர்களுடன் பேசுவதில்லை, இதுகள் ஏன்  இஞ்சை  வந்ததுதுகள்
என்று  பார்வை சொல்லும்,  பல்கலைகழகமும்  படிப்பும் காரும்  பெரிய வீடும்  நவநாகரிக ஆடைகளும்  எங்களுக்கு மட்டுமே என்று  நினைக்கின்றார்கள்  உயர்சாதி மக்கள்  என்று  கூறும்   சாதியினர்  இதை  எதிர்ப்பதால்  நான்  புறக்கணிக்கப்படுகின்றேன்  எனது  தந்தையார்   பிராமண  குலத்தவர் சாதி பாராது  திருமணம்  செய்தவர்  அவரின்  கூற்றே  எனது அறிவு  எப்பொழுதும் சொல்லுவார் சாதி பேதம்  பேசக்கூடாது  பார்க்கக்கூடாது   அது மிகப்பெரிய பாவம் , மக்கள்  நாம்  ஒரே  மனித சாதி  வர்க்கபேதங்கள்  சுயநலமிகள்  விதைத்த விதை என்பார்  அது வளர்ந்து  விருட்சமாகி நிற்கின்றது . இதை எழுதியதன் நோக்கம்  சாதித்துவேசம் என்னும்  அசுத்த  எண்ணம்  நெஞ்சில்  ஒட்டியிருந்தால் படிப்பவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என்பதற்காகவே . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக